வவுனியா கூமாங்குளம் சித்திவிநாயகர் முன்பள்ளி வருடாந்த விளையாட்டு விழா இன்று (29. 05.2022) ஞாயிற்றுக்கிழமை கூமாங்குளம் சூப்பர்ஸ்டார் விளையாட்டு மைதானத்தில் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டு
சிறுவர்களுக்கான மைதான விளையாட்டுப் போட்டிகள் நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வவுனியா நகரசபை உறுப்பினரும் எமது கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளருமான சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களால் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு ஆரம்பித்துவைக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன
அதனை தொடந்து சிறப்பு விருந்தினர்கள் கௌரவ விருந்தினர்களால் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.
