ண்டாரகம, அட்டுலுகமவைச் சேர்ந்த 9 வயதான பாத்திமா ஆயிஷா படுகொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 29 வயதான நபரை, இரண்டு நாட்கள் தடுத்துவைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

பிரதான சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட  விசாரணைகளில், சிறுமியை கடத்திச் சென்று, கொலைச் செய்துவிட்டேன் என பொலிஸாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி

அட்டுலுகம சிறுமி ஆயிஷா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் விசாரணைக்காக பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நபரின் உடலின் பல பாகங்களில் நகக் கீறல்கள் காணப்பட்டதாகவும், சந்தேகநபரின் வீட்டின் படுக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சேறும் சகதியுமான சாரம் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சிறுமி காணாமல் போன தினமான காலை 10.15 மணியளவில் சிறுமி பயணித்த வீதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் அந்நபர் இருந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர், ஆயிஷாவும் அவரது தாயும் வீட்டில் தனியாக இருந்த போது, இரவுவேளையில் வீட்டுக்குள் புகுந்து பாலியல்  பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்

பிந்தைய செய்தி

பண்டாரகம, அட்டலுகம பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட சிறுமி வன்புணர்வு செய்யப்படவில்லை என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.

சடலத்தின் பிரேதப் பரிசோதனை மூன்று தடயவியல் அதிகாரிகளில் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

மூக்கு மற்றும் வாயின் ஊடாக தண்ணீர் மற்றும் சேறு சென்றதன் காரணமாக மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.