வாகனங்களுக்கு பெற்றுக்கொள்ளப்படும் எரிபொருள் தொடர்பான தரவுகளை உள்ளடக்கிய செயலி (App) ஒன்று பொலிஸாரால் உருவாக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விநியோகம் முறையற்ற வகையில் இடம்பெறுவதை கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்த புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார். Read more
எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு இலங்கை விடுத்துள்ள கோரிக்கையை ரஷ்ய தரப்பு பெற்றுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உதவி வழங்குவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை தற்போது பரிசீலித்து வருவதாகவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் பற்றாக்குறையாகவுள்ள மயக்க மருந்துகளில் ஒரு தொகை, பிரான்ஸ் அரசாங்கத்தினால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் மூன்று மாதங்களுக்கு போதுமானவை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
இலங்கையின் நெருக்கடியான சூழலில் இந்தியாவும் ஜப்பானும் இணைந்து பணியாற்றுவதற்கு இணங்கியுள்ளதாக ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்படக்கூடும் என உலக வங்கி எச்சரித்துள்ளது.
25.05.1987இல் மரணித்த கழகத்தின் முதலாவது மன்னார் மாவட்ட தலைவர் தோழர் நடேசன் (பொன்னுத்துரை செல்வராஜா – வவுனியா) அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று….
25.05.2000இல் வவுனியாவில் மரணித்த தோழர்கள் வின்சன் (கந்தப்பு ஜெயராசா) – கரவெட்டி கிழக்கு), பண்ணை (பெருமாள் விஜயராம்) ஆகியோரின் 22ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று….
ஒரு நாள் மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிப்பதற்கு முன்பதிவு செய்து நேரத்தை ஒதுக்கிக்கொண்ட பின்னர் திணைக்களத்திற்கு வருகை தருமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
அனைத்து அரச நிறுவனங்களிலும் அத்தியாவசிய ஊழியர்களை மட்டுமே கடமைக்கு அழைக்குமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னையால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மருத்துவ அவசரத்துக்கு அம்புலன்ஸ் வண்டி தேவையாயின் 1990 எனும் அவசர இலக்கத்துக்கு உடனடியாக அழைக்கவும். 1990 என்பது சுவசெறிய சேவையாகும். அம்புலன்ஸ்கள் எரிபொருள் நிரப்பப்பட்டு பயணத்துக்கு தயாராக உள்ளன. இந்த இலவச சேவையை நாடளாவிய ரீதியில் பெற்றுக்கொள்ளலாம்.