பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. சஜித் தலைமையில் இன்று (16) நடைபெற்ற பாராளுமன்ற குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. Read more
வவுனியா ஸ்ரீ மகாவிஸ்ணு ஆலய திருமண மண்டப திறப்புவிழா நிகழ்வில் சிறப்பு அதிதியாக கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் இன்று கலந்துகொண்டு மண்டபத்தை திறந்துவைத்துள்ளார்.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மெய்நிகர் வழி மத்தியகுழுக் கூட்டம் இன்று (15.05.2022 ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 மணி தொடக்கம் பிற்பகல் 12.30 மணிவரை, கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இருதய நோயாளர்களுக்கான மருந்துப் பொருட்கள், சத்திர சிகிச்சைக்கான உபகரணங்கள் உட்பட பல மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க தெரிவித்தார்.
நாளைமறுதினம் 17ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில், விசேட கடமைகளுக்காக வெளி மாகாணங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளார். அத்துடன், அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் குறித்து நாளை கலந்துரையாடி, பின்னர் அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பில், இந்தியாவின் தி ஹிந்து பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி ஒன்று தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு, இந்திய புலனாய்வுப் பிரிவினரால் இலங்கைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் முன்னோக்கிய நகர்வுக்கு ஆதரவளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பன்னாட்டு தூதுவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அத்தோடு நாடு எதிர்கொண்டுள்ள தற்போதைய நெருக்கடி நிலைமைகள் தொடர்பிலும் எதிர்க்கட்சி தலைவர் தூதுவர்களிடம் கலந்துரையாடினார்.
14.05.1998இல் வவுனியா கோவில்குளத்தில் மரணித்த தோழர் கார்த்திக் (மாசிலாமணி ஜீவதாஸ்) அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று….