நாடு இனி வரும் காலங்களிலேயே மோசமான நிலையை எதிர்நோக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று (3) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பெரும்போகம் மற்றும் சிறுபோகத்திற்கு போதுமான உரம் காணப்படவில்லை எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் பெரும்போகத்திற்கான உரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு உரம் கிடைக்கப்பெற்றால் எதிர்வரும் ஆண்டின் பெப்ரவரி மாதம் வரை சமாளிக்கக்கூடியதாகவிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சுயமாக இலங்கையினால் இந்த ஆண்டை முழுமையாகக் கடக்க முடியாது எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாட்டுக்கான உணவு பொருட்கள் விநியோக நடவடிக்கைகள் எதிர்வரும் செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதம் வரை போதுமானதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.