மின்சார விநியோகம், பெற்றோலிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விநியோக விநியோகம் மற்றும் வைத்தியசாலை சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. 2022 ஜூன் 20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் விடுபட்ட பாடத்திட்டத்தை ஈடுகட்டும் வகையில், எதிர்வரும் ஓகஸ்ட் மற்றும் டிசெம்பர் மாதங்களில் வழங்கப்பட இருந்த பாடசாலை விடுமுறைகள் குறைக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். கொழும்பில் இன்று (21) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அமைச்சர் தெரிவித்தார்.
தமிழ் ரைம்ஸ்’ பத்திரிகையின் ஆசிரியர் திரு இராசநாயகம் அவர்களின் மறைவுச் செய்திகேட்டு ஆழ்ந்த துயரடைகின்றேன். 
உலக அகதிகள் தினம் ஆண்டுதோறும் ஜூன் 20-ம் திகதி நினைவுகூரப்பட்டு வருகின்றது. 2000ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி, அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
19.06.2005இல் வவுனியா கோவில்குளத்தில் மரணித்த தோழர் கிளியன் (வல்லிபுரம் உதயகுமாரசிங்கம் – ஓமந்தை) அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
19.06.2018இல் மரணித்த தோழர் கமல் அண்ணா (சின்னையா கமலபாஸ்கரன் – லண்டன்) அவர்களின் நான்காமாண்டு நினைவுநாள் இன்று….
அமரர் ம.சிவநேசன் 1ஆம் ஆண்டு ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் காரைதீவு விபுலானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் 18.06.2022 சனிக்கிழமை நடைபெற்றது.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மட்டக்களப்பு மாவட்ட கிளைக் கூட்டம் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ம.நிஸ்கானந்தராஜா அவர்களின் நெறிப்படுத்தலில் கட்சியின் உபதலைவர்களுள் ஒருவரான பொன்.செல்லத்துரை அவர்களின் தலைமையில் இன்றுகாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.
அரச ஊழியர்களுக்கும் கல்வி துறையினருக்கும் இரண்டு வார காலம் வீட்டிலிருந்து வேலை செய்யும் (WFH) திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது.