வவுனியா பட்டகாடு இராமர் ஆலயத்தின் அறநெறி பாடசாலையின் கலைவிழா நிகழ்வுகள் ஆலய பரிபாலன சபையின் தலைவர் மயூரதன் தலைமையில் 03/10/2022 அன்று நடைபெற்றது. நிகழ்வில் வவுனியா நகர சபை உறுப்பினரும் ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்கள் ஆலய பரிபாலன சபையினால் அறநெறி, ஆலய சமூக வளர்ச்சிக்காக உதவியமைக்காக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் குகனேஸ்வரசர்மா அவர்களால் கௌரவிக்கப்பட்டார். Read more
சிறுவர் தினத்தை முன்னிட்டு வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வில் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், வவுனியா நகர சபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் கலந்து சிறப்பித்தபோது..
வீதி விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில் குறித்த விபத்து கடத்த 1ம் திகதி இடம்பெற்றுள்ளது. சுண்டிக்குளம் கல்லாறு பகுதியை சேர்ந்த குறித்த நபர், புளியம்போக்கணை பகுதியில் தனது உறவினர் வீட்டுக்கு சென்று மூன்று பேருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.
புனர்வாழ்வுப் பணியக சட்டமூலம் குறித்த ஏற்பாடுகள் நீதித்துறை மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் என்று உயர்நீதிமன்றத்துக்கு இன்று (03) அறிவித்த சட்டமா அதிபர், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்தில் சில திருத்தங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது என்றும் அறிவித்தார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் பிரதிவாதிகளின் பிணைக் கோரிக்கை மீதான உத்தரவு நவம்பர் 24ஆம் திகதி பிறப்பிக்கப்படும் என, கொழும்பு மேல் நீதிமன்ற தீர்ப்பாயம், இன்று (03) திகதி நிர்ணயித்தது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டு நாணய மாற்று விகிதங்களுக்கமைய இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று உயர்வடைந்துள்ளது. எனினும், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மாறாமல் உள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை மாற்றமின்றி 369 ரூபாய் 91 சதமாக உள்ளது.