மன்னார் முள்ளிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், மன்னார், பெரியகமம், எழுத்தூரை வதிவிடமாகவும் கொண்ட திருமதி செபமாலை மேரி லெம்பேட் அவர்கள் இன்று (11.10.2022) செவ்வாய்க்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். Read more
டேவிட் ஐயா என கழகத் தோழர்களாலும் காந்தீய தொண்டர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்ட சொலமன் அருளானந்தம் டேவிட் (டேவிட் ஐயா) அவர்களின் ஏழாமாண்டு நினைவு நாள் இன்று….
இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுநராகவும் நாணயச் சபையின் செயலாளராகவும் கடமையாற்றிய கே.எம்.ஏ.என்.தௌலகல, ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநராக பதவி உயர்வு பெற்றுள்ளார் என்று, வங்கி, இன்று (11) அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்திலிருந்து தமிழகத்தின் சென்னைக்கான விமான போக்குவரத்தை இந்த மாத இறுதியில் முன்னெடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்துள்ளதாக பலாலி சர்வதேச விமான நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டு மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி குறித்து தாக்கல் செய்யப்பட்ட 1ஆவது பிணை முறி மோசடி வழக்கின் பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் 9 பிரதிவாதிகளை விடுதலை செய்யுமாறு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம், இன்று (11) கட்டளையிட்டது.
போராட்டங்களில் குழந்தைகளை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தாதீர்கள் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை , பெற்றோரை வலியுறுத்தியுள்ளது. இவ்வாறான போராட்டங்களில் ஈடுபடுவதன் மூலம் பிள்ளைகளின் உயிரைப் பணயம் வைக்க வேண்டாம் என பெற்றோர் மற்றும் முதியவர்களிடம் தலைவர் உதயகுமார அமரசிங்க கேட்டுக் கொண்டார்.
குடும்பங்களுக்கு பதிவாளர் தலைமையதிபதியால் வழங்கப்படும் காணாமல் போனமைக்கான சான்றிதழை அடிப்படையாகக் கொண்டு காணாமல் போன ஆளொருவரின் நெருங்கிய உறவினருக்கு 100,000/= ரூபா தொகையை செலுத்துவதற்காக 2022.03.14 அன்று இடம்பெற்ற அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.