வவுனியாவைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்ரீலை வாழ்விடமாகவும் கொண்டவரும் எமது கட்சியின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் தோழர் யோகன் (தர்மலிங்கம் யோகராஜா) அவர்களின் அன்புச் சகோதருமான திரு. தர்மலிங்கம் இந்திரராஜா (ஓய்வுபெற்ற கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்) அவர்கள் (10.10.2022) திங்கட்கிழமை கனடாவில் காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம். Read more
கழகத்தின் மத்திய குழு உறுப்பினரும், கழகத்தின் பிரான்ஸ் கிளையினுடைய முன்னாள் அமைப்பாளருமான தோழர் ரங்கா, தோழர் ராதா (ஓய்வுபெற்ற நிர்வாக கிராம அலுவலர்) ஆகியோரின் அன்புத் தாயார் திருமதி செபமாலை மேரி லெம்பேட் அவர்களின் பூதவுடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தபோது இன்று கட்சியினுடைய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்,
யாழ்ப்பாணம், தாவடி வடக்கு (J/194) மாதர் கிராம அபிவிருத்திச் சங்க அங்கத்தவர்களுக்கு சுழற்சி முறைக் கடன் வழங்குவதற்காக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் சமூக மேம்பாட்டுப் பிரிவினால் ஒரு தொகை நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நட்டாங்கண்டல் மாங்குளத்தைச் சேர்ந்தவரும் தோழர் நா.ஸ்ரீஸ்கந்தராஜா (ஓய்வுபெற்ற தபாலதிபர்) அவர்களின் அன்புச் சகோதரியுமான கிருஷ்ணபிள்ளை அன்னம்மா அவர்கள் (11.10.2022) செவ்வாய்க்கிழமை காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.