வவுனியாவைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்ரீலை வாழ்விடமாகவும் கொண்டவரும் எமது கட்சியின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் தோழர் யோகன் (தர்மலிங்கம் யோகராஜா) அவர்களின் அன்புச் சகோதருமான திரு. தர்மலிங்கம் இந்திரராஜா (ஓய்வுபெற்ற கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்) அவர்கள் (10.10.2022) திங்கட்கிழமை கனடாவில் காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
13.10.2022.