Header image alt text

இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் திகதி குறித்து கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது. Read more

இலங்கைக்கு கச்சா எண்ணெயை கடன் வரிசையில் வழங்குவதற்கான நிபந்தனைக்கு ரஷ்யா இணக்கம் தெரிவிக்கப்படுகிறது. ரஷ்யாவுக்கான இலங்கை தூதரகம் இதனை தெரிவித்துள்ளது. இது நீண்ட கால கொள்முதல் வரை நீடிக்கப்படலாம் என ரஷ்யாவுக்கான இலங்கை தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

2011ஆம் ஆண்டில், லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் காணாமல் போனமை தொடர்பான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு குறித்து, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ. எதிர்வரும் டிசெம்பர் மாதம் 15ஆம் திகதி மன்றில் ஆஜராவதற்காக மீண்டும் நோட்டீஸ் பிறப்பிக்குமாறு உயர்நீதிமன்றம், இன்று (19) கட்டளையிட்டது. Read more

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 08 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடன் மறுசீரமைப்பு தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர்   டொனால்ட் லு (Donald Lu) தெரிவித்தார். Read more

வவுனியா, நெடுங்கேணி பகுதியில் நேற்று (18) இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 21 வயது யுவதி ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர். நெடுங்கேணி, பகுதியில் வீடடில் இருந்த 21 வயது யுவதி ஒருவர் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. Read more

18.10.2005இல் மட்டக்களப்பில் மரணித்த தோழர் சேகர் (இராஜசிங்கம் இராஜசேகர் – சேற்றுக்குடா) அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..

தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ நாளை (19) இலங்கை விஜயம் செய்யவுள்ளார். கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இதனை அறிவித்துள்ளது. Read more

புனர்வாழ்வு பணியகத்திற்கான சட்டமூலத்தை இலங்கை அரசாங்கம் வாபஸ் பெற வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிவித்துள்ளது. Read more

இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் அது இலங்கையையும் பாதிக்கும் என இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகள் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். Read more