நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மீட்புப் பணிகளை மேற்கொள்ள 36 குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்னவின் பணிப்புரையின் பேரில், மேற்கு கடற்படை கட்டளை பிரிவு இரண்டு நிவாரண மற்றும் மீட்புக் குழுக்களை இரத்தினபுரிக்கும் நான்கு குழுக்களை களுத்துறைக்கும் அனுப்பியுள்ளது. Read more
		    
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரையின் பேரில் ‘எவரையும் கைவிடாதீர்கள்’ எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நலன்புரி நன்மைகள் திட்டத்தின் விண்ணப்ப இறுதி திகதி அக்டோபர் 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த திகதி அக்டோபர் 15 என அறிவிக்கப்பட்டிருந்து. 
வேர்ள்ட் பெக்கர்ஸ் இணையத்தளத்தில் இணைந்துள்ள சுற்றுலாப் பயணிகளிடம்  மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், உலகிலேயே மிகவும் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இலங்கை 12ஆவது இடத்தைப் பெற்றுள்ளதாக அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. வேர்ள்ட் பெக்கர்ஸ் இணையதள கருத்துக்கணிப்புக்கு அமைய  ஐஸ்லாந்து உலகிலேயே மிகவும் பாதுகாப்பான நாடாகவும் சுவிட்சர்லாந்து, டென்மார்க் ஆகியவை 2ஆம் மற்றும் 3ஆம் இடங்களிலும் உள்ளன. 
2005 ஆம் ஆண்டு பிப்ரவரி 02 ஆம் திகதிக்கு முன் பிறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பதிவேட்டில் இடம்பெற்றுள்ளதாக என பார்க்குதமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கிராம உத்தியோகத்தர் மூலமோ அல்லது www.elections.gov.lk என்ற இணையத்தளத்திற்கு செல்வதன் மூலமோ வாக்காளர் பதிவேட்டில் ஒருவர் பெயர் இடம்பெற்றுள்ளதை அவதானிக்க முடியும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. 
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, மருந்து மற்றும் மேலதிக உதவிகளை வழங்குமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். 
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேலதிக நீதவான் ஸ்ரீலணி பெரேரா, இன்று (14) பிடியாணை பிறப்பித்துள்ளார். 
உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்தின் புதிய துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர், நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி  நந்தலால் வீரசிங்க ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 
வவுனியாவைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்ரீலை வாழ்விடமாகவும் கொண்டவரும் எமது கட்சியின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் தோழர் யோகன் (தர்மலிங்கம் யோகராஜா) அவர்களின் அன்புச் சகோதருமான திரு. தர்மலிங்கம் இந்திரராஜா (ஓய்வுபெற்ற கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்) அவர்கள் (10.10.2022) திங்கட்கிழமை கனடாவில் காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம். 
கழகத்தின் மத்திய குழு உறுப்பினரும், கழகத்தின் பிரான்ஸ் கிளையினுடைய முன்னாள் அமைப்பாளருமான தோழர் ரங்கா, தோழர் ராதா (ஓய்வுபெற்ற நிர்வாக கிராம அலுவலர்) ஆகியோரின் அன்புத் தாயார் திருமதி செபமாலை மேரி லெம்பேட் அவர்களின் பூதவுடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தபோது இன்று கட்சியினுடைய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், 
யாழ்ப்பாணம், தாவடி வடக்கு (J/194) மாதர் கிராம அபிவிருத்திச் சங்க அங்கத்தவர்களுக்கு சுழற்சி முறைக் கடன் வழங்குவதற்காக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் சமூக மேம்பாட்டுப் பிரிவினால் ஒரு தொகை நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.