Posted by plotenewseditor on 15 November 2022
Posted in செய்திகள்
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் உக்ரைனுக்கு ரஷ்யா போர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இலங்கை புறக்கணித்துள்ளது.இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது, இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், பிரேசில், எகிப்து, இந்தோனேசியா, இஸ்ரேல், நேபாளம், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் வாக்களிக்கவில்லை. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை நேற்று (திங்கட்கிழமை) உக்ரைனுக்கு யுத்த இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்று ரஷ்யாவுக்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.சேதம், இழப்பு மற்றும் காயம் ஆகியவற்றிற்கான இழப்பீடுக்கான சர்வதேச பொறிமுறையை நிறுவுவதற்கான இந்த தீர்மானத்துக்கு சுமார் 50 நாடுகள் இணை அனுசரணை வழங்கின. Read more