திருக்கோணேஸ்வரம் தொடர்பான நூல் அறிமுக விழா 15.11.2022 செவ்வாய்க்கிழமை மாலை 3.30மணியளவில் திருகோணமலை கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் திருகோணமலை நகரசபை நூலகத்தில் கோணேஸ்வர ஆலய பரிபாலன சபைத் தலைவர் சட்டத்தரணி துஸ்யந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வின்போது திருக்கோணேஸ்வர வரலாறு உள்ளிட்ட கோணேஸ்வரம் தொடர்பிலான பல நூல்கள் வெளியிட்டு வைக்கப்பட்டன.

வரவேற்புரையை மக்கள் கலை அரங்கு, கலை, இலக்கிய செயற்பாட்டாளர் திரு.வ.தர்மபவன் ஆற்றினார். அறிமுக உரையினை ஓய்வுபெற்ற அதிபர், ஊடகவியலாளர் திருமலை நவம் அவர்கள் நிகழ்த்தினார். கருத்துரைகளை யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறை மேனாள் பேராசிரியர் சி.சிவலிங்கராஜா, யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறை மேனாள் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம், கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி குணபாலசிங்கம் ஆகியோர் வழங்கினார்கள். தொடர்ந்து நூலாசிரியர் உரையினை நூலாசிரியர் யாழ்ப்பாண பல்கலைக்கழக வேந்தர் தகைசார் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் ஆற்றினார்.

நிகழ்வில் எமது கட்சியின் தேசிய அமைப்பாளர் ஆ.ஸ்ரீஸ்கந்தராஜா, கட்சியின் மாவட்ட பொருளாளர் பகீரதன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.