Header image alt text

அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையினை ஆரம்பிக்கும் முன்பதாக மூன்று பிரதான விடயங்களை முன்னிறுத்துவதற்கு தமிழ் தேசியக் கட்சிகள் தீர்மானித்துள்ளன. தமிழ் தேசியக் கட்சிகள் இன்றுமாலை பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் நடாத்திய சந்திப்பிலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ சுமந்திரன், சி.சிறீதரன், கோ.கருணாகரம், வினோ நோகராதலிங்கம், தமிழ் மக்கள் கூட்டணியின் க.வி.விக்னேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

Read more

தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க டிசம்பரில் அழைக்கும் கூட்டத்தில் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்துக்குச் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வலியுறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தலைமையில் அவரது வீட்டில் நேற்று(23.11.2022) நடைபெற்ற கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Read more

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை, மன்னாரில் இருந்து படகு மூலம் புறப்பட்ட 2 குடும்பங்களைச் சேர்ந்த  இலங்கை தமிழர்கள் 10 பேர், தனுஷ்கோடி வந்து இறங்கினர். பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது.

இலங்கையில் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக வரவு-செலவுத் திட்டம் நிறைவடைந்த அடுத்த வாரத்தில் பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுகூடி பேச்சுவார்த்தை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (23) நடைபெற்ற வரவு-செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அழைப்பு விடுத்தார். Read more

வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இரட்டைக் குடியுரிமை கொண்ட இலங்கையர்கள் பதிவாளர் நாயகத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று பதிவாளர் நாயகம் பி.எஸ்.பி. அபேவர்தன தெரிவித்துள்ளார். அந்த அனுமதியைப் பெறுவதற்கு இரண்டு தகைமைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவை இல்லாவிடின் திருமணத்துக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். Read more

ஜேர்மன், லுட்விக்ஸ் பேர்க் நகரில் வசிக்கும் பரமானந்தம் உமாகாந்தி தம்பதிகளின் 32வது திருமண தினத்தை முன்னிட்டு (21.11.2022) ஜேர்மன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினரின்(புளொட்) ஒழுங்குபடுத்தலில், பனிக்கன்குளம் பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் மகளிர் அமைப்பினருக்கும், கிழவன்குளம் இயலருவி மகளிர் அமைப்பினருக்கும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக சுய தொழில் ஊக்குவிப்பு நிதியுதவி வழங்கப்பட்டது.

Read more

அமெரிக்க கடலோரப் பாதுகாப்பு திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட P 627 ஆழ்கடல் பாதுகாப்புக் கப்பல் ‘விஜயபாகு´ என்ற பெயரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அதிகார சபைக்கு கையளிக்கும் நிகழ்வு, இன்று (22) மாலை கொழும்புத் துறைமுக கிழக்கு முனையத்தில் இடம்பெற்றது. கடல் பிராந்தியத்தில் காணப்படும் பொதுவான கடல்சார் சவால்களை முறியடிக்கும் வகையில் கூட்டாண்மையை வலுப்படுத்தவும், மேம்படுத்தவும் இந்தக் கப்பல் அமெரிக்க கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் இலங்கைக் கடற்படைக்கு வழங்கப்பட்டது. Read more

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடிகளை அகற்றும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரை 8 இலட்சத்திற்கும் அதிக கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 206 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு, அவை  பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விடுவிக்கப்பட்டுள்ளன. இதன் பிரகாரம், 15 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை நாடு கடத்துவதற்கான இலங்கையின் ஆவணங்களுக்காக திருச்சி காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைக் கைதிகள் 4 பேரையும் நாடு கடத்துவது, இலங்கை அதிகாரிகளிடம் இருந்து பயண ஆவணங்கள் பெறுவதை பொறுத்தே அமையும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் எம்.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம், ஆவணங்களை வழங்கியவுடன், குறித்த தண்டனைக் கைதிகள், நாடு கடத்தப்படுவார்கள். அதுவரை அவர்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று பிரதீப் குமார் கூறியுள்ளார். Read more

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது. வாக்கெடுப்பில் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 121 வாக்குகளும் எதிராக 84 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்ததது. அதனடிப்படையில் 37 மேலதிக வாக்குகளினால் வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஷ்வரன் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இதேவேளை, பாராளுமன்ற நாளை காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Read more