Header image alt text

ரஷ்யாவின் அஸூர் எயார்லைன்ஸ் நிறுவனம் இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது. அதற்கமைய, ரஷ்யாவின் மொஸ்கோவில் இருந்து புறப்பட்ட அஸூர் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ZF1611 என்ற விமானம், 335 பயணிகளுடன் இன்று  (03) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. Read more

வெளிநாட்டவர்கள் மற்றும் இலங்கையர்கள் இடையேயான திருமணப் பதிவுகளுக்கு காணப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. அதற்கமைய, 2021 ஆம் ஆண்டு 18 ஆம் இலக்க சுற்றுநிருபத்தை இரத்து செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் P.S.P.அபேவர்தன தெரிவித்துள்ளார். Read more

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் நாட்டில் நீண்டகால முறைமை  மாற்றங்களை (Far Reaching Systematic Changes) ஏற்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்ட  முன்மொழிவுகளை  அமுல்படுத்துவதில் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more

02.11.2015 ஜேர்மனியில் மரணித்த தோழர் சுப்பர் (கார்த்திகேசு சிவகுமாரன் – புங்குடுதீவு) அவர்களின் ஏழாமாண்டு நினைவு நாள் இன்று….

(யாழ். வட்டுக்கோட்டை கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி – பழைய மாணவர், ஹாக்கி விளையாட்டு வீரர், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆரம்பகால உறுப்பினர், கழகத்தின் ஜெர்மன் கிளையின் முன்னணி உறுப்பினர், இலங்கையர் ஜனநாயக முன்னணியின் உபதலைவர் ஜெர்மனி)

(மலர்வு 09.04.1956 உதிர்வு 02.11.2015)

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் ஐக்கிய இராஜ்ஜிய கிளைத் தோழர்களின் நிதிப்பங்களிப்பில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக, மன்னார் சென்ற் சேர்வியர் பாடசாலையில் கல்விகற்று கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் மாவட்ட ரீதியில் எட்டாம் இடத்தைப் பெற்று பொறியியற் பீடத்திற்கு தெரிவாகியுள்ள மன்னார் பெரியகமம் எழுத்துரைச் சேர்ந்த பற்றிக் ஆனந்தகுமார் மெட்ரில் பியூலா என்ற மாணவியின் கல்விச் செயற்பாட்டினை மேம்படுத்தும் வகையில் 390,000 ரூபா பெறுமதியான மடிக்கணனி வழங்கிவைக்கப்பட்டது. இவரின் தந்தையார் புளொட் அமைப்பின் முன்னாள் போராளியாவார். Read more

இலங்கைப் பாராளுமன்றத்தினால் பல்கலைக்கழகங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான குறுகியகால பாடநெறி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அண்மையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. கடந்த 31ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது. Read more

வெளிநாட்டவர்களுக்கும் இலங்கையர்களுக்கும் இடையிலான திருமணங்களை பதிவு செய்வதில் உள்ள இடையூறுகளை நீக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன, பதிவாளர் நாயகத்திற்கு இன்று (02) பணிப்புரை விடுத்துள்ளார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. Read more

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களின் சந்​தேகநப​ராக கைது செய்யப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன், விடுதலைச் செய்யப்பட்டுள்ளார். சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக அந்த வழக்கிலிருந்து அவரை விடுவிப்பதற்கான கட்டளையை கோட்டை ​நீதவான் திலிண கமகே, இன்று (02) பிறப்பித்தார். Read more

அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிரான  எதிர்ப்புப் பேரணி’ மருதானையில் ஆரம்பமாகியுள்ளது.இந்த பேரணி கோட்டை ரயில் நிலையம் நோக்கிச் செல்வதற்கு பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது. மருதானை டெக்னிக்கல் சந்திக்கு அருகில் பொலிஸார் இடையூறு ஏற்படுத்தியுள்ளனர். Read more

02.11.2015 ஜேர்மனியில் மரணித்த தோழர் சுப்பர் (கார்த்திகேசு சிவகுமாரன் – புங்குடுதீவு) அவர்களின் ஏழாமாண்டு நினைவு நாள் இன்று…. Read more