 நாட்டின் அபிவிருத்திக்கு தேவையான சகல உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாக இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எக்ல்டன் தெரிவித்துள்ளார். நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நாட்டின் பொருளாரத்தை சீரான நிலைக்கு கொண்டு வரும் நோக்கில் மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு தெரிவித்துள்ளது

		     15 வருடங்களின் பின்னர் தமிழ் அரசியல் கைதிகள் நால்வருக்கு இன்று(13) பிணை வழங்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதியான கந்தையா இளங்கோ உள்ளிட்ட 04 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு, காலி மேல் நீதிமன்றத்தில் இன்று(13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பிணை வழங்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் 18ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கடற்படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்து, 22 பேர் காயமடைந்தமை தொடர்பில் பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
15 வருடங்களின் பின்னர் தமிழ் அரசியல் கைதிகள் நால்வருக்கு இன்று(13) பிணை வழங்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதியான கந்தையா இளங்கோ உள்ளிட்ட 04 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு, காலி மேல் நீதிமன்றத்தில் இன்று(13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பிணை வழங்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் 18ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கடற்படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்து, 22 பேர் காயமடைந்தமை தொடர்பில் பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களில் சுமார் 37,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இம்முறை 675,000 இற்கும் அதிகமான தபால் மூல விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களில் சுமார் 37,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இம்முறை 675,000 இற்கும் அதிகமான தபால் மூல விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.