Header image alt text

27.02.2022இல் மரணித்த கிளிநொச்சி முரசுமோட்டையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தோழர் அரபாத் (சிற்றம்பலம் திருச்செல்வம்) அவர்களின் ஓராமாண்டு நினைவுநாள் இன்று….

பிரித்தானியாவினால் விசா வழங்கப்படும் நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களில் இலங்கையும் உள்ளடங்கியுள்ளது. 2019ஆம் ஆண்டை விடவும், 2022ஆம் ஆண்டில் பிரித்தானிய விசா பெற்றுக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1.3 மில்லியனாக அதிகரித்துள்ளதாக பிரித்தானியாவுக்கான புலம்பெயர் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. Read more

இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்குவதற்கு உலக வங்கி தீர்மானித்துள்ளது. இலங்கைக்கு தேவையான அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்த நிதி வசதி வழங்கப்படுவதாக உலக வங்கியுடன் இணைந்த IFC நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் உள்ள 03 முக்கிய வணிக வங்கிகளுக்கு இந்த தொகை வழங்கப்படும் என IFC நிறுவனம் தெரிவித்துள்ளது. Read more

கல்வி அமைச்சிற்குள் அத்துமீறி பிரவேசித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 62 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 23 ஆம் திகதி கல்வி அமைச்சிற்குள் அத்துமீறி பிரவேசித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக வசந்த முதலிகே உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நேற்றைய(26) தினம் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட நிலைமையை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நிவித்திகல பிரதேச சபைக்கான வேட்பாளராக களமிறங்கியிருந்த நிமல் அமரசிறி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். Read more