Header image alt text

வட மாகாணத்தில் உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவை ஸ்தாபிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ரோஹினி மாரசிங்க தலைமையிலான குழு  யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களை கேந்திரமாக கொண்டு கடந்த 16, 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் விஜயம் மேற்கொண்டிருந்தது. Read more

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு முன்பாக இன்று எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சோசலிச இளைஞர் அமைப்பினால் இந்த எதிர்ப்பு நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு செல்லும் இராஜகிரிய – சரண வீதி இன்று பிற்பகல் தற்காலிகமாக மூடப்பட்டது. Read more

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 4 பெண்கள் உள்ளிட்ட 21 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வட மாகாணம் மற்றும் கொழும்பை சேர்ந்த 21 பேர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி கடந்த 2014 ஆம் ஆண்டு இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். Read more