கொழும்பில் தேசிய மக்கள் சக்தி இன்று முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு காவல்துறை நடத்திய நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகத்தில் காயமடைந்த 20 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்சமயம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்ளூராட்சி தேர்தலை பிற்போட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், உடனடியாக தேர்தலை நடத்துமாறு கோரியும் தேசிய மக்கள் சக்தி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணியை ஏற்பாடு செய்தது. Read more