இலங்கையில் அணுமின் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான முன்மொழிவுடன் கூடிய புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை ரஷ்யா முன்வைத்துள்ளதாக இலங்கை அணுசக்தி சபை தெரிவித்துள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டம் என இலங்கை அணுசக்தி சபையின் தலைவர் பேராசிரியர் S.R.D. ரோஸா கூறியுள்ளார். அணுசக்தியை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வது தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக நடவடிக்கை குழுவொன்றையும், 9 செயற்பாட்டுக் குழுக்களையும் நியமிக்க அமைச்சரவை கடந்த வாரம் தீர்மானித்தது. Read more
அதிக கடன் சுமையை சந்தித்துள்ள நாடுகளுக்கு ஆக்கபூர்வமான முறையில் உதவுவதற்காக பலதரப்பு முயற்சிகளில் பங்கேற்க சீனா தயாராகவுள்ளதாக சீன பிரதமர் Li Keqiang தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் Kristalina Georgieva உடன் தொலைபேசியில் நேற்றைய தினம் கலந்துரையாடிய போது, சீன பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக கடல் வழியாக பயணித்த போது, படகு பழுதடைந்ததில் நிர்க்கதியாகி வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளில் 20 பேர் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களை நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கு தேவையான நிதி வசதிகளை அகதிகளுக்கான சர்வதேச அமைப்பு முன்னெடுத்து வருவதாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. வியட்நாமில் தற்போது 152 இலங்கை அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய மீனவர்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், கலாநிதி S.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் குப்புசாமி அண்ணாமலைக்கு இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் அனுப்பி வைத்துள்ள பதில் கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.