தபால் வாக்குச்சீட்டுகளை 05 நாட்களுக்குள்ளும் ஏனைய வாக்குச்சீட்டுகளை 20 முதல் 25 நாட்களுக்குள்ளும் அச்சிட்டு வழங்க முடியும் என அரச அச்சகர் அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி அமைச்சின் செயலாளரூடாக அதற்கான நிதி பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. Read more
அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளின் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தயாராகியுள்ளன. சமுர்த்தி நலன்புரித் திட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டமைக்கு எதிராக இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய திகதியை அறிவித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இது தொடர்பில் அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது. அரசாங்கத்தின் புதிய வரிக்கொள்கைக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய, இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.