இலங்கையின் தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டபடி உள்ளூராட்சி தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதியன்று நடத்தப்படும் என்பதற்கு சாத்தியப்பாடுகள் குறைவு என்று நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் நடவடிக்கை அமைப்பு (பவ்ரல்) எதிர்வு கூறியுள்ளது அரசாங்கம் இந்த விடயத்தில் நீதிமன்ற முடிவுகளை கூட புறக்கணிப்பது வருந்தத்தக்கது என்று அமைப்பின் நிர்வாக இயக்குநர் ரோஹன ஹெட்டியாரச்சி குற்றம் சுமத்தியுள்ளார். Read more
இறுதிக் கிரியைகள் நாளை காலை 10.00 மணியளவில் தண்ணீரூற்று முள்ளியவளையில் நடைபெறவுள்ளது.
நாடளாவிய ரீதியில் இன்று (15) காலை 8 மணி முதல் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பை, நாளை தற்காலிகமாக கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை (16) காலை 8 மணிக்கு தற்காலிகமாக கைவிடப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தேர்தலுக்கான அச்சு நடவடிக்கைகளுக்காக பணம் வழங்குமாறு கோரி திறைசேரிக்கு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளதாக அரச அச்சகம் அறிவித்துள்ளது. திறைசேரியின் நடவடிக்கை பிரிவிற்கு குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்தார்.