முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் P.H.பியசேன, அம்பாறை – அக்கரைப்பற்றில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார். அக்கரைப்பற்றில் இன்று காலை இடம்பெற்ற விபத்தின் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார். Read more
2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட அரசியல் கைதி ஒருவர் இன்று விடுதலை செய்யப்பட்டார். விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, கடந்த 15 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த எழுத்தாளர் செல்லையா சதீஸ்குமார் இன்று விடுதலை செய்யப்பட்டார்.
வவுனியா பண்டாரவன்னியன் சிலை சந்தி பகுதியினை பண்டாரவன்னியன் சதுக்கமாக பிரகடனப்படுத்தி பண்டாரவன்னியன் சதுக்க பகுதிக்கான நினைவு பதாதை அமைக்கும் பணிகள் இன்று வவுனியா நகரசபையால் முன்னெடுக்கப்பட்டது
நாட்டின் உத்தியோகபூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளும் பணிகள் இந்த ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த 2012 ஆம் ஆண்டின் பின்னர் உத்தியோகபூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவில்லை.