சுமார் 40 அரச நிறுவனங்களை மூடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். பொதுமக்களுக்கான சேவைகள் குறைந்த மட்டத்தில் காணப்படும் அரச நிறுவனங்களை மூடுவது குறித்தே கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். செலவுகளை முகாமைத்துவம் செய்தல் மற்றும் வினைத்திறனை அதிகரித்தல் ஆகிய இலக்குகளை அடைய இதனூடாக எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். Read more
உயர் நீதிமன்ற நீதிபதிகளை அழைத்து விசாரணை செய்வது மீண்டும் ஆராயப்படுமென எதிர்பார்ப்பதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் சட்டத்தரணிகள் பேரவை அறிக்கை –
யாழ்ப்பாணம் – வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் செல்வராசா மற்றும் அவரின் மனைவி ஆகியோர் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி யாழ்போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களை புளொட் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் புளொட் யாழ் மாவட்ட அமைப்பாளரும், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா. கஜதீபன், புளொட் தலைவரின் பிரத்தியேக செயலாளர் கௌதமன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
கொழும்பில் 18.03.2003இல் மரணித்த தோழர் ரகு (கதிர்காமநாதன் இரகுபதி) அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
வவுனியா திருநாவற்குளத்தில் 18.03.1999இல் மரணித்த திருமதி வேலாயுதம் பவானிதேவி (பவானி அன்ரி) அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
வவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும் நெளுக்குளத்தை வதிவிடமாகவும் கொண்டவரும், எமது கட்சியின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் தோழர் யோகன் (தர்மலிங்கம் யோகராஜா) அவர்களின் அன்புச் சகோதரியுமான திருமதி. சுப்பிரமணியம் சகுந்தராதேவி (குஞ்சு) அவர்கள் இன்று (17.03.2023) இயற்கையெய்தினார்.
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது. ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை சித்திரை புத்தாண்டுக்கான விடுமுறை வழங்கப்படவுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.