பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக, புதிய சட்டமூல வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு அமைய, புதிய சட்டமூலம் வெளியிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரானது’ எனப் பெயரிப்பட்டுள்ள இந்த சட்டமூலம், ஆங்கிலத்தில் எண்டி – டெரரிசம் (anti-terrorism) எனக் குறிப்பிட்பட்டுள்ளது. Read more
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (23) மேலும் வலுவடைந்துள்ளதை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்றுவீதம் மூலம் அறியமுடிகிறது. அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 311 ரூபா 26 சதமாகவும், விற்பனை பெறுமதி 328 ரூபா 60 சதமாகவும் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து அமெரிக்க டொலர் மற்றும் ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் மதிப்பு உயர்ந்து வந்திருந்த போதிலும், கடந்த வாரம் மீண்டும் வீழ்ச்சியை சந்தித்திருந்தது.
பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தியப் பெருங்கடல் தீவான டியாகோ கார்சியாவில் தற்கொலைக்கு முயன்ற ஐந்து தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு அனுப்பப்பட்டதாக தி நியூ ஹியூமனிடேரியன் செய்தி வெளியிட்டுள்ளது. பிரித்தானிய அரசாங்கத்தின் குடியேற்றத் தடுப்புக் கொள்கைகளுக்கு எதிரான சமீபத்திய பின்னடைவாக, குடிவரவு அதிகாரிகளின் பராமரிப்பில் இருந்து காணாமல் போனதாக கூறப்படும் 200 ஆதரவற்ற சிறார்கள் தொடர்பான செய்தி வெளியாகியுள்ள நிலையில், இந்தச் செய்தியும் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இன்றைய தினம் அலுவலக சேவை, நுகர்வோர் சேவை உள்ளிட்ட எந்தவொரு சேவையும் முன்னெடுக்கப்படாதென நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தொழிற்சங்க இணை ஏற்பாட்டாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.இன்று காசாளர் பிரிவு மூடப்படும் அதேநேரம் கட்டணப் பட்டியல் விநியோகமும் முன்னெடுக்கப்படாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.