தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தர்மலிங்கம் சித்தார்த்தனை அரசியலமைப்பு பேரவையில் இணைத்துக் கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தர்மலிங்கம் சித்தார்த்தனை அரசியலமைப்பு சபையில் இணைத்துக்கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பரிந்துரைத்துள்ளதாக அவர் இன்று நாடளுமன்றத்தில் தெரிவித்தார். Read more
இலங்கையுடன் 2020- 22ஆம் ஆண்டுகளில் தொடர்புகளை கொண்டிருந்த சிம்பாப்வேயின் மிகவும் செல்வாக்கு மிக்க இராஜதந்திரிகளில் ஒருவரான யூபெர்ட் ஏஞ்சல்(Uebert Angel,) தமது தகுதியை பயன்படுத்தி தங்கக் கடத்தல் திட்டத்தின் மூலம் மில்லியன் டொலர்களை சலவைச் செய்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2022 கல்வியாண்டிற்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைகின்றன. தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வியியல் கல்லூரிகளில் பயின்ற 7800 டிப்ளோமாதாரிகளை அடுத்த மாதம் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களின் பெறுபேறுகள் அடங்கிய ஆவணங்கள் தேசிய கல்வி நிறுவகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு கூறியுள்ளது. முதலாம் தரம் முதல் 11 ஆம் தரம் வரை, கணிதம், விஞ்ஞானம், ஆங்கில பாடங்களைக் கற்பிப்பதற்கான ஆசிரியர்களே புதிதாக நியமிக்கப்படவுள்ளனர்.