சட்டத்தரணிகள் சங்க தலைவர் சாலிய பீரிஸின் பொரளை பகுதியிலுள்ள வீட்டுக்கு முன்பாக நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புப்பட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள ‘ஹரக் கட்டா’ என்பவரின் வழக்கில், சட்டத்தரணி சாலிய பீரிஸ் முன்னிலையாகுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. Read more
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கிய உதவி தொடர்பில் இந்தியா தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது. அத்துடன் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு இந்த உதவி உறுதுணையாக இருக்கும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை பேச்சாளர் அரிந்தம் பாக்ஜி ஊடகங்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.
காவல்துறை மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவை உயர்நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறையின் தடுப்பில் உள்ளவர்கள் பல்வேறு விசாரணைகளுக்காக வெளியே அழைத்துச் செல்லப்படும் சந்தர்ப்பங்களில் துப்பாக்கிச் சூட்டில் மரணிக்கும் சம்பவங்களைத் தடுப்பதற்கு வழிகாட்டல் கோவையை தயாரிக்குமாறு நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது.