Header image alt text

சட்டவிரோதமாக கடல் வழியாக பயணித்த போது, படகு பழுதடைந்ததில் நிர்க்கதியாகி வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளில் 20 பேர் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களை நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கு தேவையான நிதி வசதிகளை அகதிகளுக்கான சர்வதேச அமைப்பு முன்னெடுத்து வருவதாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. வியட்நாமில் தற்போது 152 இலங்கை அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். Read more

இந்திய மீனவர்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், கலாநிதி S.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் குப்புசாமி அண்ணாமலைக்கு இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் அனுப்பி வைத்துள்ள பதில் கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

நியாயமற்ற வரிக்கொள்கை, வங்கி  வட்டி வீதம் அதிகரிப்பு, சம்பளம் மற்றும் கொடுப்பனவு அதிகரிக்கப்படாமை உள்ளிட்ட விடயங்களை முன்வைத்து பல துறைகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் இன்று (01)  பணிப்பகிஷ்கரிப்பில்  ஈடுபட்டன. தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு இன்று அடையாள வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த நிலையில், பெட்ரோலிய, மின்சக்தி, துறைமுகம், ரயில்வே, ஆசிரியர் மற்றும் தபால் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் உணவு இடைவேளையின் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அவர்களுக்கு ஆதரவு வழங்கியிருந்தனர். Read more

வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு பெற்றுக்கொடுக்கும் யோசனையை பாராளுமன்றத்தில் முன்வைக்க இன்று (01) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. மார்ச் மாதம்  3 ஆம் வாரத்தில் இடம்பெறும் பாராளுமன்ற அமர்வில் குறித்த யோசனையை முன்வைக்கவும் இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more

தொடர்ந்தும் காலம் தாழ்த்தாமல் சுதந்திரமானதும் நீதியானதுமான உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை அமெரிக்க செனட் சபையின் வௌியுறவு குழு வலியுறுத்தியுள்ளது. இலங்கை மக்களின் குரலை நசுக்குவதற்கு மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் ஜனநாயக விரோத செயற்பாடு என ட்விட்டர் செய்தியூடாக வலியுறுத்தப்பட்டுள்ளது. Read more