யாழ்ப்பாணம் – வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் செல்வராசா மற்றும் அவரின் மனைவி ஆகியோர் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி யாழ்போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களை புளொட் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் புளொட் யாழ் மாவட்ட அமைப்பாளரும், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா. கஜதீபன், புளொட் தலைவரின் பிரத்தியேக செயலாளர் கௌதமன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
கொழும்பில் 18.03.2003இல் மரணித்த தோழர் ரகு (கதிர்காமநாதன் இரகுபதி) அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
வவுனியா திருநாவற்குளத்தில் 18.03.1999இல் மரணித்த திருமதி வேலாயுதம் பவானிதேவி (பவானி அன்ரி) அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
வவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும் நெளுக்குளத்தை வதிவிடமாகவும் கொண்டவரும், எமது கட்சியின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் தோழர் யோகன் (தர்மலிங்கம் யோகராஜா) அவர்களின் அன்புச் சகோதரியுமான திருமதி. சுப்பிரமணியம் சகுந்தராதேவி (குஞ்சு) அவர்கள் இன்று (17.03.2023) இயற்கையெய்தினார்.
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது. ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை சித்திரை புத்தாண்டுக்கான விடுமுறை வழங்கப்படவுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் P.H.பியசேன, அம்பாறை – அக்கரைப்பற்றில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார். அக்கரைப்பற்றில் இன்று காலை இடம்பெற்ற விபத்தின் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.
2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட அரசியல் கைதி ஒருவர் இன்று விடுதலை செய்யப்பட்டார். விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, கடந்த 15 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த எழுத்தாளர் செல்லையா சதீஸ்குமார் இன்று விடுதலை செய்யப்பட்டார்.
வவுனியா பண்டாரவன்னியன் சிலை சந்தி பகுதியினை பண்டாரவன்னியன் சதுக்கமாக பிரகடனப்படுத்தி பண்டாரவன்னியன் சதுக்க பகுதிக்கான நினைவு பதாதை அமைக்கும் பணிகள் இன்று வவுனியா நகரசபையால் முன்னெடுக்கப்பட்டது
நாட்டின் உத்தியோகபூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளும் பணிகள் இந்த ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த 2012 ஆம் ஆண்டின் பின்னர் உத்தியோகபூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவில்லை.
2021 ஆம் ஆண்டுக்கான கணக்கு அறிக்கையை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகளை விரைவில் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய இன்று முதல் எதிர்வரும் 14 நாட்களுக்குள் கண்கறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.