தொல்பொருள் ஆலோசனைக் குழுவிற்காக புதிய உறுப்பினர்களை நியமித்து புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவினால் அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. இரண்டு வருட காலப்பகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ள இந்த குழுவின் மூலம் தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன. Read more
நீண்ட கால கடன் நிலைத்தன்மையை அடைவதற்கு இலங்கையில் நிறுவன ரீதியான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. வளர்ச்சியடையும் சந்தைகளில் நாணய கட்டமைப்புகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்து வருபவரும், ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் (Johns Hopkins University) பிரயோக பொருளியல் பேராசிரியருமான Steve Hanke சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.
தபால் வாக்குச்சீட்டுகளை 05 நாட்களுக்குள்ளும் ஏனைய வாக்குச்சீட்டுகளை 20 முதல் 25 நாட்களுக்குள்ளும் அச்சிட்டு வழங்க முடியும் என அரச அச்சகர் அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி அமைச்சின் செயலாளரூடாக அதற்கான நிதி பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளின் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தயாராகியுள்ளன. சமுர்த்தி நலன்புரித் திட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டமைக்கு எதிராக இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய திகதியை அறிவித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இது தொடர்பில் அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது. அரசாங்கத்தின் புதிய வரிக்கொள்கைக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய, இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வவுனியா நொச்சிமோட்டையில் 09.03.1991இல் மரணித்த தோழர்கள் தீபன் (கந்தையா மரியதாஸ் – பாலையூற்று), நாதன் (வடிவேல் இலங்கைநாதன் – நொச்சிமோட்டை), றொபேர்ட் (சிவசுப்பிரமணியம் அரிரங்கநாதன் – கொக்குவில் கிழக்கு) ஆகியோரின் 32ஆம் ஆண்டு நினைவு நாள்
09.03.2022இல் மரணித்த தோழர் கடாபி (பொன்னுத்துரை விஸ்வலிங்கம் – மட்டக்களப்பு) அவர்களின் ஓராம் ஆண்டு நினைவுநாள் இன்று….
அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக இன்று(09) முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இன்றைய(09) தொழிற்சங்க நடவடிக்கையில் மருத்துவம், துறைமுகம், மின்சாரம், நீர் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் உட்பட 40 தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன.
நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக உள்ளூராட்சி மன்ற தேர்தலை தாமதமின்றி நடத்த வேண்டும் என கூறி புத்தசாசன நிறைவேற்றுக் குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. 01. அமைச்சர்களின் எண்ணிக்கையை 15 ஆக மட்டுப்படுத்தி இராஜாங்க அமைச்சர்களை நீக்குதல். 02. அமைச்சுகளின் நிர்வாகத்தை செயலாளர்களின் கீழ் கொண்டு வருவதுடன், அரச நிகழ்வுகள் அனைத்தையும் இரத்து செய்தல்.