இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வௌிநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளமையால், பிரமித்த பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி நாடு திரும்பும் வரை அமுலாகும் வகையில், பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரமித்த பண்டார தென்னகோன் கடமையாற்றவுள்ளார். Read more
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இங்கிலாந்துக்கான விஜயம் மேற்கொண்டுள்ள காலப்பகுதியில் நிதி அமைச்சின் நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்காக, பதில் நிதி அமைச்சராக ஷெஹான் சேமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இந்த பதவிப் பிரமாணம் இடம்பெற்றதாக நிதி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(04) அதிகாலை இங்கிலாந்திற்கு பயணித்துள்ளார். பிரித்தானியாவின் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி சென்றுள்ளார். ஜனாதிபதியுடன் மேலும் 8 பேர் நாட்டிலிருந்து பயணித்துள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் குறிப்பிட்டார். பிரித்தானியாவின் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளது.