வவுனியா மகாறம்பைக்குளம் தாஸ் நகர் விபுலானந்தர் முன்பள்ளியில் 28.05.2023 அன்று திரு. எஸ். சியோன் பெரேரா அவர்களின் தலைமையில் நடபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி லிங்கநாதன் ஆகியோரும், சிறப்பு விருந்தினர்களாக திருமதி வி.சசிகலா (முன்பள்ளி கோட்ட இணைப்பாளர்), அயல் பாடசாலைகளின் ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர் Read more
போலி கடவுச்சீட்டினூடாக நாட்டிற்குள் பிரவேசித்து இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவின் எழுத்துமூல கோரிக்கையின் பிரகாரம் விடுவிக்கப்பட்டதன் பின்னர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட சீனப் பிரஜை, சீன அரசாங்கத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரென தெரியவந்துள்ளது. சட்ட மா அதிபரினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அறிவித்தலினூடாக இந்த விடயம் தெரியவந்துள்ளது.
மத சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தில் சட்டமூலமொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக புத்தசாசன அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நதாஷா எதிரிசூரிய எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் நேற்று(28) மாலை ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.