உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக PAFFREL அமைப்பு தெரிவித்துள்ளது. சிவில் அமைப்புகளுடன் இணைந்து இது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என PAFFREL அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி தேர்தல் நடைபெறுவதில் நிச்சயமற்ற தன்மை காணப்படுவதாகவும், இதுவரை தேர்தலுக்கான நிதி வழங்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனூடாக நாட்டு மக்களின் ஜனநாயக உரிமை  மறுக்கப்படுவதாக ரோஹன ஹெட்டியாரச்சி குறிப்பிட்டார்.

இதேவேளை, நாட்டில் இதுவரை 74 தேர்தல்கள் நடைபெற்றுள்ள போதிலும் இம்முறை 75 ஆவது தேர்தலில் சில அரச அதிகாரிகளின்  இடையூறுகளால் தபால் மூல வாக்களிப்புகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐனநாயக சீர்திருத்தம் மற்றும்  தேர்தல் ஆய்வு நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.