புதிதாக ஸ்தாபிக்கப்படவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு சபைக்கான விண்ணப்பத்தை தாம் சமர்ப்பித்துள்ளதாக அதன் தற்போதைய தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தமது விண்ணப்பத்தை அரசியலமைப்பு பேரவைக்கு தாம் சமர்ப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்புரிமைக்காக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரியவும் முன்னதாக விண்ணப்பித்திருந்தார்.