வலி தெற்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரம்-

2013-09-11 17.40.56 2013-09-11 17.43.06 2013-09-11 17.47.43 2013-09-11 18.08.45 2013-09-11 18.11.14யாழ்ப்பாணம் வலி தெற்கு உடுவில், மள்ளுவம் பகுதியிலும், கோண்டாவில் பகுதியின் தாவடி கிழக்கிலும் நேற்றையதினம் மாலை தமிழ் தேசியக் கூடடமைப்பின் இரு தேர்தல் கருத்தரங்குகள் இடம்பெற்றுள்ளன. இக்கருத்தரங்குகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், வலி தெற்கு பிரதேச சபைத் தலைவர் பிரகாஸ் மற்றும் ஊர்ப் பிரமுகர்களும் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தனர். இக் கருத்தரங்குகளில் பிரதேசத்தைச் சேர்ந்த பெருமளவிலான இளைஞர்களும், முதியோர்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். இங்கு உரையாற்றிய அனைவரும், வட மாகாணசபைத் தேர்தலில் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே வாக்களித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகப் பெரும்பான்மை வெற்றி பெறுவதனை உறுதிசெய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்.