Header image alt text

யாழ்தேவி மோதி தந்தையும் மகனும் பலி

train_accident_001இன்று காலை பளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துகொண்டிருந்த யாழ்.தேவி ரயில், வவுனியா புளியங்குளம் விளக்கு வைத்த குளம் பகுதியில் வந்து கொண்டிருந்த நேரம் மோட்டார் சைக்கிளில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையினைக் கடக்க முற்பட்ட தந்தையையும், மகனையும் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தவிபத்தில், வவுனியா சுந்தரபுரத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியம் சத்தியசுதன் வயது 32 மற்றும் அவருடைய மகனான சத்தியசுதன் டினோயன் ஆகியோரே பலியாகியுள்ளனர். நெடுங்கேணியில் உள்ள அவர்களின் உறவினர் வீட்டுக்கு சென்று திரும்பும் வழியில் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத காரணத்தால் மனைவியை ஏ-9  பாதையில் இறக்கி விட்டு மாற்று வழியினூடாக வவுனியாவை சென்றடையும் நோக்கோடு புகையிரத கடவையை கடக்க முற்பட்ட வேளையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்

வீதிப் புனரமைப்பு வேலைகளால் பாதிப்பு முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்

_mullaitheevumullaitheevu_முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பகுதியில் முப்பது வருடங்களாகப் புனரமைக்கப்படாத ஒரு முக்கிய வீதி புனரமைக்கப்பட்டு புதிதான நிர்மாணம் செய்யப்பட்டுள்ள போதிலும், மல்லாவி நகர வர்த்தகர்களுக்கும் பொதுமக்களக்கும் புதிய பிரச்சினைகளைத் தோற்றுவித்திருப்பதாகக் கூறி வெள்ளியன்று அங்கு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது. ‘மல்லாவி கடைவீதி ஊடான பிரதான வீதி நான்கு நாலரை அடி உயரம் உயத்தப்பட்டு புதிதாக அமைக்கப்பட்டிருப்பதனால், கடைகளுக்கு மக்கள் செல்ல முடியாதுள்ளது. கடைவீதிக்கு வருபவர்கள் தங்களுடைய சைக்கிள்கள் உட்பட வாகனங்களை நிறுத்தவும் முடியாது. அதற்கான இடம் கிடையாது. உயர்த்தப்பட்டுள்ள வீதியில் இருந்து கடைகள் பள்ளத்தில் இருப்பதனால், கடைகள் ஒரத்தில் புதிய சிறிய வீதி அமைக்கப்படுகின்றது. இதில் கடைகளுக்குத் தேவையான பொருட்களை வாகனங்களில் கொண்டு சென்று இறக்கவும் முடியாதுள்ளது இந்த வீதியின் உயரத்தைக் குறைத்து முன்பு இருந்த வீதியின் மட்டத்தில் இருந்து ஒரு அடி உயரத்தில் இருவழிப்பாதை அமைத்துத் தரவேண்டும் என்பதே எமது கோரிக்கை. வீதி எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்று வர்த்தகர்கள் தெரிவித்திருந்த ஆலோசனைகள் அதிகாரிகளினால் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாத காரணத்தினாலேயே இப்போது பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன என்று வர்த்தகர்கள் பலரும் தெரிவித்தனர். இந்த வீதிப் பிரச்சினை குறித்து பதிலளித்த முல்லைத்தீவு அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், இந்த வீதி அமைக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்து விட்ட நிலையிலேயே இதுபற்றி தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருப்பதாகவும: எனினும் பொது மக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் ஏற்பட்டுள்ள வசதியீனங்கள் குறித்து வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இதற்குரிய மாற்று ஒழுங்குகளுக்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் வடமாகாணம் இராணுவமயமாக இருந்துவருவதால் பெண்கள் பாதிக்கப்படகின்றார்கள் – முதலமைச்சர் விக்னேஸ்வரன்.

womensjaffna_womens_day_005சர்வதேச மகளிர் தினத்தையொட்டி விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தினரால் யாழ்ப்பாணம் நல்லூரில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சர்வதேச மகளிர் தின நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வட மாகான முதலமைச்சர் திரு. விக்னேஸ்வரன் உரையாற்றுகையில் ‘வடமாகாணம் இராணுவமயப்படுத்தப்பட்டு – ள்ளதால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதனால் அவர்களின் இயற்கையான சுதந்திர நடமாட்டம் தடைப்படுத்தப்பட்டுள்ளது. பல பெண்குழந்தைகள் கல்வி, தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள இப்பாதுகாப்பின்மை தடையாக இருந்து வருகிறது. மருத்துவ வசதிகளை நாடிச் செல்வது கூடத் தடைப்பட்டுள்ளது. இராணுவத்தினர் சம்பந்தப்பட்ட பாலியல் வன்முறைகள், பாலியல் தொந்தரவுகள் காவற்துறையினரால் அசட்டையுடனேயே கையாளப்படுகின்றன’ என குறிப்பிட்டார். வன்னிப் பிரதேசத்தில் இளைஞர்கள் பெருமளவில் இருக்கின்ற போதிலும், இளம் பெண்களை இராணுவத்தில் சேர்ப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை எடுத்திருப்பது குறித்து கேள்விகள் எழுந்திருப்பது பற்றியும் அவர் தெரிவித்துள்ளார். ‘அண்மையில் இராணுவத்திற்குத் தமிழ்ப் பெண் யுவதிகளைச் சேர அழைத்துள்ளார்கள். ஏன் ஆண்களை அழைக்கவில்லை என்ற கேள்வி உடனேயே எழுகிறது. அது மட்டுமல்ல் இளம்பெண்களை வீடுவீடாகச் சென்று வலிந்து இராணுவத்தினர் அழைப்பதாக எமக்குச் செய்திகள் வந்துள்ளன. பயம், வறுமை, பாதுகாப்பற்ற தன்மை போன்ற பல காரணங்களால் எம் பெண்கள் இராணுவத்துக்குள் உள்ளீர்க்கப்படக் கூடும். ஆனால் மேலிடத்து ஆணைகளை நிறைவேற்றுவதே இராணுவக் கீழ்மட்டச் சிப்பாய்களின் கடமை என்பதை இந்த யுவதிகள் தெரிந்திருக்கின்றார்களா என்பது எமக்குத் தெரியாதிருக்கின்றது.’ போரினாலும், போருக்குப் பின்னரும் பாதிக்கப்பட்ட நிலையில் சமூகத்தில் பெண்கள் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலைமையில், மாற்றம் அவசியம் என்பதையும் அவர் வலியுறுத்தியிருக்கின்றார்

சர்வதேச மகளிர் தினம்-

Posted by plotenewseditor on 8 March 2014
Posted in செய்திகள் 

சர்வதேச மகளிர் தினம்-

makalir thinam..சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. அவளின் சக்தி, தேசத்தின் சக்தி எனும் தொனிப்பொருளில் இம்முறை இலங்கையில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகின்றது. சர்வதேச மகளிர் தினம் முதன்முறையாக 1975ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனம் செய்யப்பட்டது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் பல்வேறு வேலைத்திட்டங்களை ஒழுங்கு செய்துள்ளதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் மேலதிக செயலாளர் அசோகா அலவத்த தெரிவித்துள்ளார். 2012ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2013ஆம் ஆண்டில் துன்புறுத்தல்களுக்கு இலக்கான பெண்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மூதூர் படுகொலை தொடர்பில் விசாரணை செய்யுமாறு பிரான்ஸ் வலியுறுத்தல்-

muthur padukolaiதிருகோணமலை – மூதூரில் இடம்பெற்ற 17 தொண்டு பணியாளர்களின் கொலை தொடர்பில் நீதி விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மாநாட்டில் நேற்றையதினம் உரையாற்றிய பிரான்ஸின் பிரதிநிதி இதனைத் தெரிவித்துள்ளார். மூதூரில் வைத்து 2006ம் ஆண்டு பிரான்ஸின் பட்டினிக்கு எதிராக அமைப்பின் 17 தொண்டு பணியாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர். அது தொடர்பிலான விசாரணைகள் இன்னும் நிறைவு செய்யப்படவில்லை என்றும், இந்த நிலையில் குறித்த விசாரணையை முழுமைப்படுத்த வேண்டும் என்றும் பிரான்ஸ் பிரதிநிதி கோரியுள்ளார்.

டஸ்மன் டுட்டுவின் கடிதத்தை கருத்தில் கொள்க – பிரட் எடம்ஸ்-

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கின்ற நாடுகள், தென்னாபிரிக்காவின் முன்னாள் பேராயர் டஸ்மன் டுட்டுவின் கடிதத்தை கருத்திற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பக ஆசிய பிராந்திய பணிப்பளர் பிரட் எடம்ஸ் இதனைக் கூறியுள்ளார்.டஸ்மன் டுட்டுவின் கடிதத்தில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் மற்றும் பல்வேறு நாடுகளின் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைச்சாத்திட்டிருந்தனர்.

அமெரிக்க பிரேரணை ஆராயப்படுகிறது – இந்தியா 

ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள அமெரிக்க பிரேரணையின் பிரதி ஒன்று இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பிரேரணை குறித்து இந்திய அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையீட் அக்பர்தீன் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த பிரேரணையின் எழுத்து வடிவம் கிடைக்கப்பெறாமல், அதற்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்க முடியாது என்று இந்திய தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது குறித்த பிரேணையின் பிரதி கிடைத்துள்ள நிலையில், அது குறித்த தீர்மானத்தை இந்தியா விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும் இந்திய லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டே இந்த பிரேரணை குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வவுனியாவிலிருந்து யாழ் சென்ற பஸ்மீது தாக்குதல்

ctb busவவுனியாவிலிருந்து யாழ். நோக்கி பயணித்த கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்சில் பயணம் செய்த பயணிகள் நேற்று இரவு இனந்தெரியாதவர்களினால் தாக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இரணைமடு பகுதி உணவகத்தில் உணவிற்காக பஸ் நிறுத்தப்பட்டிருந்தவேளை யாழிலிருந்து சென்ற ‘கப்’ ரக வாகனம் ஒன்றில் சென்ற ஐந்து பேர் கொண்ட குழுவினர் அங்கிருந்த பயணிகளை சிங்களத்தால் திட்டியுள்ளனர். அனைவரையும் சுடப்போவதாக மிரட்டியதோடு தமிழ் இனத்தையும் புலிகளையும் சொல்லத் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். அப்போது அங்கிருந்த வங்கி அதிகாரி நாகேந்திரம் புஸ்பவசந்தன் என்பவர் அதைத் தட்டிக்கேட்டார். அதன்போது அவரை ‘கப்’ வாகனத்திற்கு இழுத்துச் சென்று கடுமையாகத் தாக்கியதோடு அக்குழு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஜெனீவா யோசனைக்கு ஆதரவான அரச நிறுவனங்கள் தொடர்பில் விசாரணை-

இலங்கைக்கு எதிராக செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளன. ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள இலங்கைக்கு எதிரான யோசனைக்கு ஆதரவாக செயற்படும் இலங்கையில் 24 அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு கடந்த காலங்களில் வெளிநாடுகளில் இருந்து எவ்வளவு பணம் கிடைத்துள்ளது என்பது குறித்து விசாரணை நடத்த அரசாங்கம் தீரமானித்துள்ளதாக தெரியவருகிறது. மேற்படி அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு நோர்வே மற்றும் அமெரிக்காவில் இருந்து நிதியுதவிகள் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளதென அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என இந்த நிறுவனங்கள் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று ஜெனீவா பயணம்-

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 25ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று ஜெனீவா பயணமாகவுள்ளார். இந்நிலையில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க களுத்துறையில் நேற்று ஊடகவியாளர் சந்திப்பொன்றை நடத்தினார். அங்கு அவர் பேசும்போது, எம்மீது பொறாமைப்பட்டு, குரோத மனபான்மையுடன் நம்மை அடிமைப்படுத்துவதற்காகவே சர்வதேச விசாரணையை வலியுறுத்தி இவ்வாறு தீர்மானங்களை முன்வைப்பதற்கு முற்படுகின்றனர். நமது நாட்டிற்கு எதிராக செயற்படும் சர்வதேச சக்திகள் மற்றும் எமக்கு எதிராக பொய் கூறும் நவனீதம்பிள்ளை ஆகியோர் கூறுவதற்காக இராணுவ வீரர்களை காட்டிக்கொடுக்க முடியாது. யாராவது தவறு செய்திருந்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இராணுவம் தயாராகவே உள்ளது. இலங்கையின் குழு என்ற வகையில் ஜனாதிபதியின் ஆலோசனைகளுடன் உறுதியான நிலைப்பாட்டுடன் அனைத்து சவால்களுக்கும் முகம் கொடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

239 பேருடனான வானூர்தி வியட்னாம் கடலில் வீழ்ந்தது-

malaysian airlines239 பேருடன் மலேசியாவில் இருந்து பீஜிங் நோக்கி பயணித்த நிலையில் காணாமல் போன வானூர்தி வியட்னாம் கடற்பரப்பில் வீழ்ந்திருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வியட்நேமின்- ஃபூ – க்வோக் தீவிலிருந்து 153 கடல்மைல்களுக்கு அப்பால் இந்த வானூர்தி வீழ்ந்துள்ளது. இது தொடர்பில் வானூர்தியில் பயணித்தவர்களின் உறவினர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 14 நாடுகளைச் சேர்ந்த 227 பயணிகளுடன், 12வானூர்தி அதிகாரிகளும் பயணித்திருந்தனர். அவர்களில் 153பேர் சீனர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த வானூர்தியில் இலங்கையர்கள் யாரும் இருக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை இந்த வானூர்தி கோலாலம்பூர் வானூர்தி நிலையத்தில் இருந்து புறப்பட்டதன் பின்னர், அது குறித்த தகவல்களை அறியமுடியாதிருந்தது. இதனால் அவ் வானூர்தியை தேடும் நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தன. இந்நிலையிலேயே குறித்த வானூர்தி வியட்னாம் கடற்பரப்பில் வீழ்ந்திருப்பது வியட்னாம் கடற்படை ராடர் கருவியில் பதிவாகியுள்ளதாக வியட்னாம் கடற்படை அறிவித்துள்ளது. அத்துடன் வானூர்தியில்; பயணித்த பயணிகள் அனைவரும் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு ஊடகமொன்று கூறுகின்றது.

இந்திய மீனவர்கள் 17பேர் விடுதலை-

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களின் 8 படகுகளுடன் நேற்று இலங்கை இந்திய கடல் எல்லையில் வைத்து இந்திய கடற்படை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் குறித்த மீனவர்கள் அனைவரும் காரைக்கால் பகுதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

சர்வதேச விசாரணை நடத்த வேண்டிய காலம் வந்துள்ளது – நவநீதம்பிள்ளை-

navilpillaiஇலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்றை முன்னெடுக்க வேண்டிய காலம் வந்திருப்பதாக ஐக்கிய நாடகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெறும் 25வது மனித உரிமைகள் மாநாட்டில் வருடாந்த மனித உரிமைகள் அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்து ஐந்து வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் இலங்கையின் உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வி அடைந்துள்ளன. இந்த நிலையில் சர்வதேச விசாரணை ஒன்றை நடத்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிற்கு விஜயம்-

india &tnaதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு விரைவில் இந்தியாவுக்கான விஜயம் மேற்கொள்ளவுள்ளது. கடந்த புதன்கிழமை நாடாளுமன்ற கட்டித்தொகுதியில் இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட சந்திப்பின்போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா செல்லவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குழு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட ராஜதந்திரிகளை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை ஆணைக்குழு ஜெனீவா பயணம்-

manitha urimai aanaikuluபொதுநலவாய நாடுகளின் அழைப்பையேற்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழு நாளைமறுதினம் 9ஆம் திகதி, ஜெனீவா பயணமாகவுள்ளது. மனித உரிமை ஆணைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சிப்பட்டறையொன்று 9ஆம் திகதிமுதல் 14ஆம் திகதிவரை ஜெனீவாவிவ் நடைபெறவுள்ளது. பொதுநலவாய நாடுகளிலிருந்து இப்பட்டறைக்கு பங்கு பற்றுநர்கள் வருகை தரவுள்ளனர். இலங்கையிலிருந்து செல்லும் குழுவினர் ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் 11ஆம் திகதி கலந்துகொள்வார்கள். மனித உரிமை ஆணைக்குழு தவிசாளர் பிரியந்த பெரேரா தலைமையிலான குழுவில் 10 பிரதிநிதிகள் இடம்பெறுகின்றனர். வடக்கு மாகாணத்திலிருந்து ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட இணைப்பாளர் த.கனகராஜாவும், கிழக்கு மாகாணத்திலிருந்து கல்முனை பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸதீன் லத்தீப்பும் இதில் உள்ளடங்குகின்றனர்.

இலங்கையில் தேர்தல்களுக்கு மதிப்பில்லை-பவ்ரல்-

paffrelஇலங்கையில் உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல்கள் அடுத்தடுத்து நடத்தப்படுவதால், தேர்தல்களுக்கு மக்கள் மத்தியில் மதிப்பில்லாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. ஒரே நேரத்தில் இல்லாமல், கட்டம் கட்டமாக தேர்தல்கள் நடத்தப்படுவதாலேயே இந்நிலைமை ஏற்பட்டிருப்பதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இதேவேளை தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தல்களுடன் தொடர்புடைய 562 முறைபாடுகள் பதிவாகியிருப்பதாக கெபே அமைப்பு தெரிவித்துள்ளது. சட்டவிரோத தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மற்றும் பிரசார நடவடிக்கைகளுக்காக அரசாங்க சொத்துக்கள் பயன்படுத்தப்பட்டமை போன்ற விடயங்கள் தொடர்பில் அதிகளவிலான முறைபாடுகள் பதிவாகி இருப்பதாகவும் கபே அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அகதிகளை தடுத்து வைக்கும் திட்டம் மாற்றப்பட வேண்டும்-நவிபிள்ளை-

navneethamஇலங்கை உள்ளிட்ட அகதிகளை பப்புவா நியுகினி மற்றும் நவுரு தீவுகளில் தடுத்து வைக்கும் அவுஸ்திரேலியாவின் திட்டத்தை மறுபிரசீலனை செய்யுமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். 25வது மனித உரிமைகள் மாநாட்டில் வருடாந்த அறிக்கையை வெளியிட்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். பப்புவா நியுகினியில் உள்ள மானஸ் தீவில் கடந்த மாதம் இடம்பெற்ற வன்முறையின்போது ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அத்துடன் 30ம் அதிகமானவர்கள் காயமடைந்தனர். அந்த முகாமில்pருந்து அகதிகள் தப்பிச்செல்ல முற்படுகின்ற நிலையிலேயே இவ்வாறான வன்முறைகள் பதிவாகி உள்ளன. மனித உரிமை மீறல்களும், வன்முறைகளும் அதிகமாக நடைபெற்ற இலங்கை, சிரியா போன்ற நாடுகளிலிருந்தே அகதிகள் அவுஸ்திரேலியாவுக்கு வருகின்றனர். இந்நிலையில் அவுஸ்திரேலிய அரசு அங்கு தொடர்ந்து இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அதிகளை தடுத்து வைப்பது தொடர்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

44 தமிழ் யுவதிகள் இராணுவத்தில் இணைப்பு-

unnamed3இலங்கை இராணுவத்தின் மகளிர் படையணிக்கு வட மாகாணத்தைச் சேர்ந்த மேலும் 44 தமிழ் யுவதிகள் இணைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு இராணுவத்திற்கு இணைக்கப்பட்ட தமிழ் யுவதிகளில் 20பேர் முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் ஏனைய 24பேரும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

புலிகள் அமைப்பிற்கு அமெரிக்காவில் தடை நீடிப்பு-

americaஅமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ள தீவிரவாதிகள் அமைப்பின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, புலிகள் அமைப்பை அமெரிக்கா மீண்டும் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. உலகில் உள்ள 60 தீவிரவாத அமைப்புகளை அமெரிக்கா 2014ம் ஆண்டில் தடை செய்துள்ளது. புலிகள் அமைப்பு 1997 ஒக்டோபர் 8ம் திகதி முதல் முதலில் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது. அன்று தொடக்கம் ஒவ்வொரு வருடமும் புலிகள் அமைப்பு அமெரிக்காவில் தடை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை இராணுவத்துக்கு இந்தியாவில் தொடர்ந்து பயிற்சி-

sri &indiaஇலங்கை இராணுவத்தினருக்கு இந்தியாவில் வழங்கப்படும் பயிற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என புதுடில்லிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் உறுதியளித்துள்ளார். இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய மூன்று நாடுகளின் கடல்வழி பாதுகாப்பின் ஒத்துழைப்பு தொடர்பான தேசிய பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் புதுடில்லியில் நேற்று நடைபெற்றது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாலைதீவின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் முகம்மது நஜீம், பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். மொரீஷியஸ் மற்றும் செஷல்ஸ் நாடுகளின் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். இந்த கூட்டத்தின்போது இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு இடையே பரஸ்பரம் கடற்படை வீரர்களுக்கு பயிற்சி அளித்தல், தகவல் பரிமாற்றம், ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனுடன் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது, இலங்கை இராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் அளிக்கப்படும் பயிற்சிகள் தொடரும் என சிவசங்கர் மேனன் உறுதியளித்துள்ளார் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழில் ஏப்ரல் மாதம் கல்விமாநாடு-

northern-எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23, 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் கல்வி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. வடமாகாண சபை நிறுவப்பட்டதன் பின்னர் வடமாகாண கல்வியமைச்சர் டி.குருகுலராஜா மற்றும் வடமாகாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள், கல்விமான்கள் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் கல்வியமைச்சில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போதே மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இந்த சந்திப்பின்போது கல்வி அபிவிருத்தி மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கவிருக்கின்ற கல்வி வேலைத்திட்டங்கள் மற்றும் அதனோடு இணைந்து முரண்பாடுகள் குறுத்தும் ஆராயப்பட்டுள்ளது என்றும் அவ்வமைச்சு அறிவித்துள்ளது. இந்த மாநாட்டை உயர்க்கல்வியமைச்சு, விளையாட்டு அமைச்சு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு ஆகியன இணைந்தே நடத்தவிருக்கின்றன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். சிவில் பாதுகாப்பு குழுக்கள், கிராம உத்தியோகத்தர்களிடையே கலந்துரையாடல்-

யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட ஒன்பது பொலிஸ் நிலையங்களின் சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. யாழ் நீராவியடி இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் இன்று முற்பகல் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் வட மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் உள்ளிட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்னர். நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, வேலணை, யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய், சண்டிலிப்பாய், சங்கானை, உடுவில், தென்மராட்சி, காரைநகர் ஆகிய பிரதேச செயலகங்களின் கிராம உத்தியோகத்தர்களும் இதில் பங்குபற்றியிருந்தனர். நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கொடிகாமம், வட்டுக்கோட்டை, மானிப்பாய், சுன்னாகம், கோப்பாய் ஆகிய பொலிஸ் பிரிவுகளின் சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.

துரித கதியில் யாழ். ரயில் நிலையம் புனரமைப்பு-

jaffna railway.......jaffna railway ....யுத்தத்தின்போது முற்றாக சேதடைந்த யாழ். ரயில் நிலையத்தின் புனரமைப்பு பணிகள் தற்போது துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொழும்பு கோட்டைக்கும் பளைக்கும் இடையிலான ரயில் சேவை இவ்வாரம் ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து யாழ்பாணத்திற்கான ரயில் சேவையில் ஆர்வம் செலுத்தப்பட்டுள்ளது. பல மில்லியன் ரூபாய் செலவில் இந்த ரயில் நிலையம் புனரமைக்கப்படுகின்றது. எதிர்வரும் சித்திரை வருடத்தன்று புத்தாண்டு பரிசாக யாழ் மக்களுக்கு யாழ் வரையான ரயில் சேவை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 1902ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ரயில் நிலையம் அக்காலத்தில் இலங்கையில் ரயில்வே துறையில் முக்கிய இடம்பிடித்திருந்தது. பயணிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள் என எப்போதுமே பரபரப்பாக காணப்பட்ட ரயில் நிலையமும் அதனை அண்மித்த பகுதிகளும் யுத்தம் காரணமாக ஓய்ந்து போய் காணப்பட்டது. வடபகுதி ரயில் மார்க்கத்தின் மிகவும் முக்கியமான ரயில் நிலையமாக விளங்கும் இந்த ரயில் நிலையத்திலிருந்து 1990ஆம் ஆண்டு ஜூன் மாதத்தின் பின்னர் சேவைகள் இடம்பெறவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஏ9 வீதி பளை பஸ் விபத்தில் 20ற்கு மேற்பட்டோர் காயம்-

palai_accident_002palai_accident_004

pallai-02palai_accident_006 

யாழ் – கொழும்பு ஏ9 வீதியில் பளை பகுதியில் பஸ் ஒன்று இன்றுகாலை 7 மணியளவில் விபத்திற்கு உள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணத்திற்கும் கிளிநொச்சிக்கும் இடையே சேவையில் ஈடுபடும் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட உத்தியோகஸ்தர்களுக்கான தனியார் பஸ் ஒன்றே விபத்திற்கு உள்ளாகியுள்ளது. வேகமாக பயணித்த பஸ் பாதசாரி கடவையில் சென்ற மாணவர் ஒருவரை மோதியுள்ளதுடன் கட்டுப்பாட்டை இழந்து கடை தொகுதியுடனும் மோதியுள்ளது. இதனால் இரண்டு கடைகள் முற்றாக சேதமடைந்துள்ளன. விபத்தில் 20ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், இவர்களுள் 8பேர் பளை வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. காயமடைந்த ஏனையவர்கள் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தைத் தொடர்;ந்து கிளிநொச்சி பளை பிரதேசத்தில் போக்குவரத்து ஒழுங்குகள் பொலீசாரினால் முறையாக அமுலாக்கப்படவில்லை என தெரிவித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

காணாமற்போனோருக்கு சான்றிதழ் வழங்குவது தொடர்பில் ஆராய்வு-

காணாமற் போனவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் புதிய நடைமுறை தொடர்பில் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவுடன் கலந்துரையாடப்பட்டதாக அதன் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தெரிவித்துள்ளார். காணாமற்போனவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்குப் பதிலாக ‘இல்லாமல் போயுள்ளார்’ என்ற சான்றிதழ் வழங்குவது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் ஆணையாளர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தெரிவிக்கையில், இறப்புச் சான்றிதழ் வழங்குவதைக் காணாமற் போனவர்களின் உறவினர்கள் உணர்வுபூர்வமாகப் பார்கின்றனர். அவர்கள் தமது உறவுகள் இன்னமும் இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கின்றனர். அதனால் அவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்குப் பதிலாக இவ்வாறான சான்றிதழ் வழங்கும் பொறிமுறை பற்றி ஆராயப்படுகின்றது என்று தெரிவித்துள்ளார்.

இணையச் சேவையை இலவசமாக வழங்கத் திட்டம்-

untitledஉலகின் அனைத்துப் பகுதி மக்களும் இணையச் சேவையை எளிதாகவும் இலவசமாகவும் பெறக்கூடிய வகையில் புதிய திட்டத்தை நியூயோர்க்கை மையமாக கொண்ட முதலீட்டு நிதியம் ஒன்று அறிமுகப்படுத்தவுள்ளது. அதிக சேவைக் கட்டணம், தணிக்கை, கட்டுப்பாடு, தொலை தூரத்தை சென்றடைவதில் சிக்கல் போன்ற பல்வேறு காரணங்களால் இணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இந்த குறையை போக்கும் வகையில் அனைத்து நாட்டினரும் எளிதாக இணையத்தின் சேவையை பெற வசதியாக ‘அவுட்டர்நெட்’ என்ற புதிய திட்டம் ஒன்று செயல்படுத்தப்படவுள்ளது. குறித்த செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த, செயற்கைக்கோளின் தயாரிப்புச் செலவு மட்டும் ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்முதல் 3இலட்சம் அமெரிக்க டொலர் வரை செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த செலவை நன்கொடைகள் மூலம் பெற்றுக் கொள்வதற்கு அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மீனவர்களை விடுவிக்கக் கோரி ஜெயலலிதா கடிதம்-

a00(3220)bயாழ் சிறைகளில் இருக்கும் இந்திய மீனவர்கள் கடந்த இரண்டு தினங்களாக மேற்கொண்டு வந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி குலத்துங்க தெரிவித்துள்ளார். இலங்கை வந்த இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் விசேட பிரதிநிதிகள் நேற்றுமாலை அவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில், இவர்கள் தமது போராட்டத்தை கைவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில் தற்போது யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்டிய கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 151 பேர் யாழ் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் ஒன்றை பிரதமருக்கு அனுப்பியுள்ளார். இலங்கை மற்றும் தமிழக மீனவர்களுக்கும் இடையில் சந்திப்பு நடைபெறவுள்ள நிலையில், இவ்வாறு தொடர்பில் இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்வதால், அது குறித்து குற்றம் சுமத்த இனி தம்மிடம் வார்த்ததைகள் இல்லை என்று ஜெயலலிதா தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மன்னார் மனித் எச்சங்கள் தொடர்பில் புதிய தகவல்-

mannar_1மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைக்குழி தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அனுராதபுரம் நீதிமன்ற விசேட வைத்தியர் எல்.டி.வைத்தியரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். மனித புதைகுழியின் கீழ் பழமையான மயானம் ஒன்று காணப்படுவதாகவும், அதன் எலும்புக்கூடுகள் பல அகழ்வின்போது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர குறிப்பிட்டுள்ளார். மன்னார் மனித புதைக்குழியை தோண்டும் பணிகள் குறித்து நேற்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது குறித்த புராதன மயானம் தொடர்பில் ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையிலேயே அந்த புதைக்குழியை மீண்டும் தோண்டுவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இதிலிருந்து கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளன என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மதுவரி திணைக்கள அதிகாரிகளின் வீடுகள்மீது தாக்குதல்-

மதுவரி திணைக்கள ஆணையாளர் வசந்த ஹப்பு ஆராச்சியின் ஜா-எல பமுனுகமவில் உள்ள வீட்டுக்கும், மதுவரி திணைக்களத்தின் விசேட பரிசோதனைப் பிரிவின் பொறுப்பதிகாரி டொஸ்மன் பெர்னாண்டாவின் கொட்டாவை ருக்மல்கமவில் அமைந்துள்ள வீட்டுக்கும் இன்று அதிகாலை துப்பாக்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவங்களில் யாருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை. எனினும் இருவரின் வீடுகளிலும் ஜன்னல்கள் மற்றும் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. சம்பவம் பற்றிய விசாரணைக்காக விசேட விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.

குப்பிளானில் ‘பாலசங்கரின் பயங்கரம்’ குறுந்திரைப்படம் வெளியீடு-

யாழ், குப்பிளான் விநாயகர் ஆலய மண்டபத்தில் பாலசங்கரின் பயங்கரம் என்கின்ற குறுந்திரைப்படம் கடந்த 02.03.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியிடப்பட்டது. இந்த குறுந்திரைப்படமானது பாலசங்கரின் பயங்கரம் என்ற பெயரில் உதயசங்கரின் நெறிப்படுத்தலின்கீழ் உருவான படமாகும். இது பாதீனியத்தினால் ஏற்படக்கூடிய பயங்கர அழிவுகள் மற்றும் ஆபத்துக்கள் சம்பந்தமாக அறிவுறுத்துகின்ற ஒரு படமாகும். வலிகாமம் மேற்கு கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் பொன். சந்திரவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த குறுந்திரைப்பட வெளியீட்டு விழாவின் முதன்மை விருந்தினர்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை விவசாயத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன், புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்;த்தன் ஆகியோரும், சிறப்பு விருந்தினராக வலிதெற்கு பிரதேச சபையின் தவிசாளர் ரி. பிரகாஸ் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். இங்கு உரையாற்றிய அனைவரும், பாத்தீனியத்தின் விளைவுகள் பற்றியும் அதனை அழிக்க வேண்டியதன் அவசியம் தொடர்ப்பிலும் விளக்குவதாக இந்த குறுந்திரைப்படம் அமைகின்றது. எனவே இந்த முயற்சிகளை வெகுவாகப் பாராட்டுகின்றோம் என்று தெரிவித்தனர்.

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் யாழ் விஜயம்-

nofigro kape japan thoothuvarஇலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். இந்த விஜயத்தின்போது அவர், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளார். வடக்கு மாகாண உள்ளுராட்சி அலுவலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பில் மாகாணத்தின் மருத்துவ தேவைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்-

afkhan1ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமிட் கர்சாய் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அழைப்பிற்கிணங்க அவர் இங்கு வருகின்றார். ஆப்கான் ஜனாதிபதி கடந்த மாதம் இலங்கைக்கு வருகை தரவிருந்த போதிலும், அண்மையில் காபூலில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலையடுத்து கர்சாயின் விஜயம் பிற்போடப்பட்டிருந்தது. இந்த விஜயத்தின்போது, இரு நாடுகளுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆட்பதிவுத் திணைக்களத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர் பற்றாக்குறை-

ஆட்பதிவுத் திணைக்களத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதால் தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒருநாள் சேவையின் கீழ், அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வரும் பலர், விண்ணப்பங்களை சமர்ப்பித்தும் தமக்கு தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவில்லை என கூறுகின்றனர். இந்த விடயம் தொடர்பில் ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ் சரத் குமார கூறுகையில், கடந்த 28ஆம் திகதிமுதல் இருமொழிகளில் தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்படுவதால், சற்றுத் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மொழிமூல மொழி பெயர்ப்பாளர்களுக்கு பற்றாக்குறை காணப்படுகின்றமை இதற்கான காரணமாகும். மூன்று வாரங்களுக்குள் இப் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொடுத்து, தேசிய அடையாள அட்டையை முறையாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் கூறினார்.

அம்பாறையில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு-

amparaiஅம்பாறையில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வரலாறு மற்றும் தொல்பொருள் கற்கை பிரிவு மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள கற்குகை ஒன்றிலிருந்து இந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டதாக பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் பிரிவு பேராசிரியர் கருனாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இந்த கல்வெட்டு, சுமார் இரண்டாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் ‘பிறாக்மி’ எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட ஒன்று எனவும் பேராசிரியர் கூறியுள்ளார்.

இந்திய வெளிவிவகார செயலர் இலங்கைக்கு விஜயம்-

sujatha singhஇந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சுஜாதா சிங் இம்மாத நடுப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் தனது விஜயத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

யாழ்தேவி ஜுன் மாதத்தில் யாழ்ப்பாணம் பயணம்-போக்குவரத்து அமைச்சர்-

yaal deviயாழ்தேவி புகையிரதம் எதிர்வரும் ஜுன் மாதம் யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் குமார வெல்கம நேற்று தெரிவித்துள்ளார். இதேவேளை, செப்டெம்பர் 14ஆம் திகதிக்கு முன்னர் காங்கேசன்துறைக்கும் யாழ்.தேவி புகையிரதம் செல்லவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புனரமைக்கப்பட்ட கிளிநொச்சி பளை புகையிரத நிலையம் நேற்றுக்காலை உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டதுடன் யாழ்.தேவி கடந்த 28 வருடங்களுக்கு பிறகு கொழும்பிலிருந்து பளை வரை தனது பயணத்தை நேற்று உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்திருந்தது. மேற்படி நிகழ்வினில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே போக்குவரத்துத் துறை அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 7ல்; தமிழகத்தில் ஏப்ரல் 24ல் வாக்களிப்பு-

indiaஇந்திய மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 7 ஆம் திகதி முதல் 9 கட்டங்களாக நடைபெறவுள்ளது. டெல்லியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையாளர் வி.எஸ்.சம்பத் இதனை அறிவித்துள்ளார். தேர்தல் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் சட்ட விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். ஏப்ரல் 7ஆம் திகதி முதல் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளதாகவும், பின்னர் ஏப்ரல் 9, 10, 12, 24, 30 ஆகிய திகதிகளிலும், மே மாதம் 7,12 ஆம் திகதிகளிலும் வாக்களிப்பு இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 9 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் ஏப்ரல் 24 ஆம் திகதி ஆறாவது கட்ட தேர்தலின்போது வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. மக்களவைத் தேர்தலின் வாக்கெண்ணும் பணி மே 16ஆம் திகதி நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தலுக்காக, இந்தியா முழுவதும் 9,30,000 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

அரசியல் நோக்கம் கொண்ட சில நாடுகள் இலங்கைமீது அழுத்தம் – அமைச்சர் பீரிஸ்-

எவ்வித அடிப்படைகளும் இன்றி அரசியல் நோக்கங்களைக் கொண்டு சில நாடுகள் இலங்கைமீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐநா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடரில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐநா மனித உரிமை ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு இலங்கை தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும். யுத்தம் முடிந்து இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த தேசிய செயற்திட்டம் என்ற பெயரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் பிரேரணையையும் ஐநா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையையும் இலங்கை நிராகரிக்கிறது. Read more

க.மு தம்பிராசாவின் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்கிறது-

வலி வடக்கு மற்றும் சம்பூர் கிராம மக்களின் மீள்குடியேற்றத்திற்காக மக்களுக்குரிய உறுதிக் காணிகளிலிருந்து உடனடியாக அரச படைகள் வெளியேற வேண்டுமென்றும், உறுதி வழங்கப்பட்ட உலருணவு நிவாரணம் உடனடியாக வழங்கப்பட வேண்டுமென்றும் கோரி அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி க.மு தம்பிராசா அவர்கள் மேற்கொண்டுவரும் காலவரையற்ற தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்றுடன் பதின்மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது. இது தொடர்பில் க.மு தம்பிராசா அவர்கள் தெரிவிக்கையில்,   

இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தின் பதினோராவது தினமான நேற்றுமுன்தினம் வலிவடக்கு மீள்குடியேற்றச் சங்கத்தின் இணைச் செயலாளர் தனபாலசிங்கம் அவர்களும், பொருளாளர் குணசேகரன் அவர்களும் வந்து சத்தியாக்கிரகத்தில் பங்கேற்றிருந்தார்கள். நேற்றையதினம் வட மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்னம் அவர்களும் வந்து சத்தியாக்கிரகத்தில் பங்கேற்றிருந்தார். அத்துடன் தையிட்டி கிராம முன்னேற்றக் சங்க உறுப்பினர்களும் இந்த சத்தியாக்கிரகத்தில் நேற்று கலந்துகொண்டிருந்தார்கள்.   Read more

வடமாகாண சபை உறுப்பினர்கள் மாமடு பழம்பாசி மக்கள் சந்திப்பு-

ravikaran_visit_mamadu_006முல்லைத்தீவு ஒட்டு சுட்டான் பிரதேச செயலர்பிரிவுக்குட்பட்ட மாமடு, பழம்பாசி கிராமங்களுக்கு விஜயம் செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி லிங்கநாதன் மற்றும் ரவிகரன் ஆகியோர் பிரதேச மக்களின் குறைகளைக் கேட்டறிந்து கொண்டார்கள். வீதிகள் புனரமைப்பு தொடர்பில் மாமடு பழம்பாசி மக்கள் வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு விடுத்த வேண்டுகோளுக்கிணங்க அங்கு சென்ற அவர்கள், அந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடியுள்ளனர். மாமடு சந்தியிலிருந்து பழம்பாசி சந்தி வரையான சுமார் இரண்டரை கிலோ மீற்றர் தூரமான பாதையின் சீர்கேட்டை அம் மக்கள் சுட்டிக்காட்டினர். அத்துடன் இப்பாதையினை பழம்பாசி, சாளம்பை, ஒதியமலை, பெரியகுளம், பழைய மாமடு வீதி, மாமடு சந்தி ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 350 குடும்பங்களுக்கு மேற்பட்டோர் பயன்படுத்துவதையும் சுகயீனமானவர்களை கொண்டு செல்வதில் உள்ள சிக்கல்கள், பாடசாலை மாணவர்கள், அலுவலக பணியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், பஸ் போக்குவரத்து பிரச்சினை என்பன தொடர்பிலும் அவர்கள் விளக்கியுள்ளனர். மக்களின் குறைகளை கேட்டறிந்த வட மாகாணசபை உறுப்பினர்கள், குறைகளைத் தீர்ப்பதற்கு உரியவர்களுடன் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுப்பதூக உறுதியளித்துள்ளனர்.

ravikaran_visit_mamadu_005ravikaran_visit_mamadu_003ravikaran_visit_mamadu_001

வலி. வடக்கு பாதுகாப்பு வேலி படையினரால் அகற்றல்-

IMG_4137வலி. வடக்கு பிரதேசத்தில் உள்ள உயர்பாதுகாப்பு வலய சுற்றுவேலிகளை அகற்றும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளனர். வலி. வடக்கு வயாவிளான், குட்டியபுலம் பகுதியினூடாக செல்லும் உயர் பாதுகாப்புவலய எல்லை வேலியை நேற்றுமாலை அகற்றும் பணியில் படையினர் ஈடுபட்டிருந்தனர். கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் யுத்தம் காரணமாக வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறவில்லை. யுத்தம் முடிவடைந்து 5வருடங்கள் ஆகின்ற நிலையிலும் வலி.வடக்கு மக்கள் மீள்குடியேற்றப்படாமல் அப்பிரதேசம் உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பாட்டு பிரதேசத்தை சுற்றி உயரமான பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு மக்கள் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்படாத பிரதேசமாகக்கப்பட்டிருந்தது. அங்கு தம்மை மீள்குடியேற்றம் செய்யுமாறு கோரி அப்பிரதேச மக்கள் பல போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இந்நிலையில் உயர் பாதுகாப்பு வலய எல்லை கம்பி வேலிகளை அகற்றும்பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை குழுவினரின் ஜெனிவா விஜயம்-

imagesCAH8ITDXஇந்த முறை ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் பங்குகொள்ளும் வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸ் உள்ளிட்ட இலங்கை குழுவினர் நேற்று ஜெனிவா நகரை சென்றடைந்துள்ளனர். இந்த குழுவினார் நாளை ஜெனிவா மனித உரிமைகள் அமர்வில் பங்குகொள்கின்றனர். ஜெனிவா மனித உரிமைகள் மாநாடு ஐ.நா பொதுச் செயலாளர் பான்கி மூன் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதன்பிள்ளை ஆகியோர் தலைமையில் நேற்று ஆரம்பமானது. இதனிடையே, ஜீ.எல் பீரிஸ் எதிர்வரும் வியாழக்கிழமை நவனீதன்பிள்ளையை சந்திக்கவுள்ளார். இந்நிலையில், இலங்கை தொடர்பான நவனீதன்பிள்ளையில் அறிக்கை எதிர்வரும் 26ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். இதேவேளை இலங்கை தொடர்பில் சர்வதேச ரீதியான செயற்பாடுகள் முன்னெடுக்க வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானிய அமைச்சர் ஹ்யூகோ ஸ்வையா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நேற்று ஆரம்பமான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரின் 25வது மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியப் பிரதமர் சந்திப்பு-

mahinda manmohan meetமியன்மாருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இருவருக்கும் இடையிலான இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவுகளை மேம்படுத்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மியன்மாரின் தலைநகரான நேபிடோவில் நடைபெற்றுவரும் வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பில் (பிம்ஸ்டெக்) அங்கம் வகிக்கும் ஏழு நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மியன்மார் சென்றுள்ளார். இதேவேளை இலங்கை தமிழ் மக்களின் புனர்வாழ்வு பணிகளுக்காக தொடர்ந்தும் பொறுப்புடன் செயலாற்றப்படும் என இந்த வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அவசியமாகின்றன. இதன்காரணமாகவே அந்த மக்களுக்கு வீடுகள், பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகள் நிர்மாணித்து கொடுக்கப்படுகின்றது. நல்லிணக்கம் மற்றும் 13வது அரசியலமைப்பு தொடர்பிலும் இந்தியா தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து பளைக்கான யாழ்தேவி ரயில் போக்குவரத்து-

yaal deviகிளிநொச்சியிலிருந்து பயணத்தை ஆரம்பித்த யாழ்தேவி கடுகதி ரயில் இன்று நண்பகல் பளை ரயில் நிலையத்தைச் சென்றடைந்துள்ளது. யுத்தத்தின்போது சேதமடைந்த ரயில் பாதை புதிதாக அமைக்கப்பட்டதை குறிக்கும் முகமாக கிளிநொச்சியிலிருந்து பளைவரை ரயில் பயணம் இன்று இடம்பெற்றுள்ளது. போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம, அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா, பிரதியமைச்சர் ரோஹன திஸாநாயக்க, இந்திய உயர் ஸ்தானிகர் வை.கே.சின்ஹ ஆகியோர் இந்த புகையிரத சேவை தொடர்பிலான ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

வடக்கு, கிழக்கின் பசுமையை அழிப்பதற்கே பாதீனியச் செடிகள் கொண்டுவரப்பட்டன-த.சித்தார்த்தன்-

download (1)வடக்கு, கிழக்கின் மண்ணின் வளத்தையும் பசுமையையும் அழிப்பதற்காவே இந்தியாவிலிருந்து பாதீனியச் செடிகள் கொண்டுவரப்பட்டன என புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். வடக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பாதீனியம் ஒழிப்புப் படையணியின் அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

1அவர் மேலும் உரையாற்றுகையில், நாங்கள் இளைஞர்களாக இருக்கும்போது பாதீனியம் என்ற ஒன்றை அறிந்ததே இல்லை. 1987அம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து இந்தியப் படையினர் இலங்கைக்குள் கால் அடி எடுத்து வைத்தபோது அவர்கள் பாதீனியம் என்ற கொடிய செடியையும் கெணர்டுவந்தனர்.

இந்தியப் படையினர் இலங்கை வந்தபோது இந்தியப் படையினரால் எங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று எமது மக்கள் நம்பினர். ஆனால் மாறாக யத்தம் தொடர்ந்தது. பேரழிவுகளும் தொடர்ந்து இன்றுவரை எமது மக்கள் மீள முடியாத துயரத்துக்குள் வாழ்ந்து வருகின்றார்கள்.

வடக்கு, கிழக்கின் மண் வளத்தையும் பசுமையையும் ஒழிக்கவே அவர்கள் பாதீனியத்தை கொண்டுவந்திருக்கிறார்கள். அன்று தொடக்கம் இன்றுவரை பாதீனியம் ஒழிப்பது தொடர்பில் பேச்சுக்களையும் அறிக்கைகளையும் பார்த்திருக்கிறோம். யாராலும் அதனை முன்னின்று அழிக்க முடியவில்லை.

download (3)ஆனால், இன்று அதனை அழித்தே தீருவோம் என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் அவர்கள் திடசங்கற்பம் கொண்டிருக்கின்றார். இதற்கென ஒரு படையணி இங்கு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

அவர் விவசாய அமைச்சர் என்பதற்கு அப்பால் ஒரு சூழலியலாளரும் கூட, எனவே அவருடைய பாதீனியம் ஒழிப்பு முயற்சிக்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதுடன் அவருடைய நடவடிக்கைக்கு நன்றியுடையவர்களாக இருப்போம். எனவே, எமது விவசாயத்தை அழிக்கும் பாதீனியத்தை ஒழிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்று தெரிவித்தார்.

download (2)இதேவேளை, பாதீனிய செடியை இல்லாதொழிப்பதற்கு வடக்கு மாகாண விவசாய அமைச்சு அமைத்துள்ள விசேட அணியில் 400பேர் இணைக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொன்றும் 10பேர் கொண்ட குழுக்களாக 40 இடங்களில் பாதீனிய ஒழிப்பு வேலைத்திட்டங்களை நாளை புதன்கிழமை முதல் முன்னெடுக்கவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களுக்காக உழைக்கும் மிகப்பெரும் சக்தியான ஜனநாயக மக்கள் முன்னணியை ஆதரிக்க வேண்டும்-த.சித்தார்த்தன்-

Sithar-ploteஎம்மோடு இணைந்து தமிழ் மக்களுக்காக உழைக்கின்ற மிகப்பெரும் சக்திகளான மனோ கணேசன், குமரகுருபரன் போன்றவர்களுக்கும், ஜனநாயக மக்கள் முன்னணிக்கும் ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் தமது ஆதரவினை வழங்குவதன்மூலம் தமிழரின் பிரதிநிதித்துவத்தை தெற்கிலும் நிறுவிக்கொள்ள முடியுமென புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணியினால் யாழ் நகரில் நேற்றுக்காலை நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், கடந்த காலங்களில் ஜனநாயக மக்கள் முன்னணி மற்றைய கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டிருந்தாலும், நாம் அக்கட்சியின் உறுப்பினர்களுக்கு பகிரங்கமான ஒத்துழைப்பினை வழங்கியிருந்தோம். இந்நிலையில் நடைபெறவுள்ள மேல் மாகாணசபைத் தேர்தலில் மனோ கணேசன் அவர்களின் தலைமையிலான அணி களமிறங்குகிறது.

எங்களோடு இணைந்து தமிழ் மக்களுக்காக உழைக்கின்ற மிகப்பெரும் சக்தியாக ஜனநாயக மக்கள் முன்னணியும், மனோ கணேசன், குமரகுருபரன் போன்றவர்களும் இருக்கின்றார்கள். அத்தகைய உழைப்பு கட்சிகளுக்காக அல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களின் நலன்களுக்கான உழைப்பாக இருந்ததை நாங்கள் பார்க்கின்றோம்.

எனவே தார்மீக ரீதியாக தமிழ் பேசும் மக்கள் தங்கள் ஒத்துழைப்பினை அவர்களுக்கு வழங்க வேண்டும். அதன் மூலமே தமிழர்களின் அடையாளத்துடன் கூடிய பிரதிநிதித்துவத்தை தெற்கிலும் நிறுவிக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.