Header image alt text

பிரதமராக  மோடி தேர்ந்தெடுக்கப்படுகிறார் கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு

Moodyபுதுடெல்லி: பாஜ நாடாளுமன்ற கட்சியின் கூட்டம் 20ம் தேதி நடக்கிறது. அதில், பிரதமராக  மோடி தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்த கூட்டத்துக்கு கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது.மக்களவை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 336 இடங்களை பிடித்து வரலாறு காணாத வெற்றி பெற்றது. பாஜ மட்டுமே 282 இடங்களை பிடித்து தனிப்பெரும்பான்மை பெற்றது. கடந்த 30 ஆண்டுகளில் காங்கிரஸ் அல்லாத தனிப் பெரும்பான்மை பெற்ற ஒரே கட்சி என்ற சாதனையையும் பாஜ படைத்தது. இந்த சாதனை வெற்றிக்கு காரணமான பாஜ பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட போது அகமதாபாத்தில் இருந்தார். தனது வீட்டில் இருந்தபடி, தேர்தல் முடிவுகளை கவனித்தார். Read more

யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த 20 பேர் தெற்கில் கைது .

தென்பகுதியில் முன்னெடுக்கப்படும் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் தொழில் செய்துவந்த யாழ்ப்பாணம் ஆயித்தமலையைச்சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. அவர்கள், உன்னெல்லையில் வீடொன்றை வாடகைக்கு எடுத்தே தங்கியிருந்து தொழிலுக்கு சென்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மாத்தறையில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கின்ற யுத்தவெற்றி விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களில், ஏழுபேர் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் என்றும் அவர்கள் புனர்வாழ்வு முகாம்களிலிருந்து தப்பியோடியவர்கள் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

இராஜினாமா செய்தார் இந்திய பிரதமர் 

. இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள், இன்று(17) குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து தங்களது இராஜினாமா கடிதத்தை அளித்துள்ளனர். இந்திய மக்களவைத் தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளதையடுத்து, மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின்  கடைசி அமைச்சரவை கூட்டம் இன்று(17) நடைபெற்றது. இதன் போது பிரதமர் மன்மோகன் சிங்கை பாராட்டி அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து அமைச்சர்களும் பங்கேற்ற இந்தக் கூட்டத்திற்கு பின் பிரதமர் மன்மோகன் சிங்கும், அவரது அமைச்சரவை உறுப்பினர்களும் தங்களது பதவிகளை இராஜினாமா செய்தனர். இதையடுத்து, ராஜினாமா கடிதத்தை, மன்மோகன் சிங் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் கையளித்துள்ளார்.

 மே 18 நினைவு தினத்தினை பொது இடத்தில் நினைவு கூர்ந்தால் கைது செய்வோம்-பொலிஸ்

imagesCASUZRLMரசாங்கத்தின் உத்தரவிற்கமைய மே 18 நினைவு தினத்தினை பொது இடங்களில் அனுஷ்டிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும் அவரது சகாக்களும் உயிரிழந்த தினமாகையினால் அவர்களை நினைவுகூருவார்கள் என்ற ரீதியிலே இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 18 நினைவு தினத்தினை பொது இடத்தில் நினைவு கூர்ந்தால் கைது செய்வோம என யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். அதேபோல், வடமாகாண சபையிலும் அஞ்சலி செலுத்தவுள்ளதாக அறிந்தோம், ஆனால் அங்கும் அஞ்சலி செலுத்த அனுமதியளிக்கமாட்டோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகமே வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்.

sivajilingam(11)வடமாகாணசபை முன்றலில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை நினைவுகூர்ந்ததினை அடுத்து, அங்கு நின்ற ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ‘இதே நாளில் தான் பல்லாயிரக்கணக்கான எம் உறவுகள் கொன்றொழிக்கப்பட்டது. இத்தினத்தில் நாம் இறந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்துவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இன்று இங்கு இம்மக்களை நினைவு கூர்ந்து ஏற்றப்பட்ட சுடர் தட்டி வீழ்த்தப்பட்டு சப்பாத்துக் கால்களால் மிதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நாட்கள் மட்டும் அல்ல இந்த மாதம் பூராகவும் இத்தினத்தை அனுஷ்டிப்போம். அத்துடன், இடம்பெறவிருக்கும் வடமாகாண சபையின் அடுத்த அமர்வில் கூட அஞ்சலி செலுத்துவோம்’ என்று அவர் மேலும் தெரிவித்தார். முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று (16) வடமாகாண சபைக்கு சென்றிருந்த போது சிவாஜிலிங்கத்தை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். எனவே வடமாகாண சபைக்கு வெளியே வைத்து அவர் தீபமேற்றி அஞ்சலி செய்த போது, பொலிஸார் அந்த தீபங்களை எடுத்து எறிந்து அஞ்சலி செலுத்துவதைத் தடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அல்-கொய்தா தீவிரவாத அமைப்புடன் பாரிய தொடர்பு இலங்கையர் கைது

main_oo_1605_p4aஅல்-கொய்தா தீவிரவாத அமைப்புடன் பாரிய தொடர்புகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் இலங்கையர் ஒருவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் சேர்த்து, மேலும் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இம்மூவரும் இந்தியாவில் வைத்தே கைது செய்யப்பட்டார்கள் இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், இந்தியதாவிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் மீது தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தனர் என முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. கைதாகியுள்ள இலங்கையர், கடந்த 2011ஆம் ஆண்டு முதல் மலேசியாவில் தங்கியுள்ளார் என்றும் இவர் இதற்கு முன்னர் இருமுறை கைது செய்யப்பட்டவர் என்றும், தீவிரவாத அமைப்பில் ஆட்களைச் சேர்க்கும் பணியிலேயே இவர் ஈடுபட்டுள்ளார் என்றும் விசாரணைகள் மூலம் தெரியவந்ததாகவும். த ஸ்டார் ஒன்லைன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

பங்களாதேஷ் படகு விபத்தில் நூற்றுக்கணக்கானோர் பலி.

1333371நேற்று வியாழக்கிழமை, சுமார் 250 – 300 பயணிகளுடன் பங்களாதேஷின் தலைநகர் டாக்காவிலிருந்து 27 கிலோமீற்றர் தொலைவிலுள்ள முன்ஷிகஞ்ச் மாநிலத்திலுள்ள ஆற்றில் பயணித்த படகொன்று, சீரற்ற காலநிலையினால் விபத்துக்குள்ளானதில் சுமார் 200 பேர் பலியாகியிருக்கலாம் என அந்நாட்டு தகவல்கள் தெவிக்கின்றன. எம்.வி.மிராஜ்-4 என்ற அந்த படகு முன்ஷிகஞ்ச் மாவட்டத்தில் ரசூல்பூர் கிராமம் அருகே மேக்னா ஆற்றில் சென்றுகொண்டிருந்தபோது மோசமான வானிலை காரணமாக திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மீட்பு பணிகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

புலிகளுக்கு 5 வருட தடை – இந்தியாவில்.

Indiaதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது முதல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தடை நீடிக்கப்படுவது வழக்கம். இதற்கான அறிவிப்பு மே மாதம் அல்லது ஜூன் மாதம் வெளியிடப்பட்டு வந்தன.
2009ஆம் ஆண்டு இலங்கை அரசு புலிகள் இறுதிப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டதாக மேமாதம் அறிவிக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகாலமாக இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் செயல்படவும் இல்லை.
ஆனால் இலங்கை அரசு அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இயங்குவதாக கூறி அதன் ஆதரவு அமைப்புகளையும் தடை விதித்தது. இப்படியான தடையை நீக்க வேண்டும் என்று தமிழக கட்சிகள் இந்திய மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தும் வருகின்றன.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருமா? வராதா என்ற நிலையில் அதுவும் நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் ஒரேயடியாக எதிர்பாராத விதமாக 5 ஆண்டுகாலத்துக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் மீது தடையை நீட்டித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

பிராபாகரனுக்கு அஞ்சலி செலுத்தவேண்டாம் – இந்திய அதிகாரிகள் ஆலோசனை

imagesCA47OAWZதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டாம் என இலங்கை அகதிகளுக்கு இந்திய அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கைத் தமிழ் அகதிகள் வாழ்ந்து வரும் முகாம்களில் இவ்வாறு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. அகதி முகாம்களில் வாழ்ந்து வரும் மக்களை சட்டவிரோதமான முறையில் நாடுகளுக்கு அனுப்பி வைக்கவும் முயற்சிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விடயங்கள் குறித்து இலங்கை அகதிகள் விழிப்புடன் இருக்க வேண்டுமென அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. வரும் மே 18 முள்ளிவாய்கால் நினைவுதினம் அனுஸடிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது

காணாமல்போனோர் பட்டியலிலிருந்து 90 வீதமானோரை நீக்க நடவடிக்கை – ருவன் வணிகசூரிய

ruwan wanigasuriyaஇலங்கையில் காணாமற்போனதாக கூறப்படுபவர்கள் தொடர்பான பெயர்ப்பட்டியலிலிருந்து 90 சதவீதமானவர்களின் பெயர்களை நீக்குவதற்கு பாதுகாப்பு தரப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
காணாமற்போனதாக கூறப்படுபவர்களில் அநேகமானவர்கள், வெளிநாடுகளில் சுகபோக வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவர்கள் தொடர்பில் சர்வதேச நாடுகளிடத் விபரம் கோரியுள்ளோம். அந்த விபரங்கள் கிடைக்கும் பட்சத்தில் 90 சதவீதமானவர்களின் பெயர்கள், காணாமற்போனோர் பட்டியலில் இருந்து நீக்கப்படும்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் கே.தயாபரராஜா, தனது குடும்பத்தாருடன் இந்தியாவில் தஞ்சமடைந்திருப்பதன் மூலம் காணாமற்போனோர்கள், வெளிநாடுகளில் தங்கியிருக்கின்றமை உறுதியாகியுள்ளது. Read more

உலகில் பலகோடி மக்கள் தம் சொந்த நாட்டிலேயே இடம் பெயர்ந்து வாழ்கிறார்கள்-

untitledஉலகக நாடுகளில் மொத்தம் மூன்று புள்ளி மூன்று கோடி மக்கள் தம் சொந்த நாட்டிலேயே இடம் பேர்ந்து வாழ்ந்து வருவதாகவும், கடந்த வருடத்திலும் பார்க்க இவ் வருடம் தம் சொந்த நாடுகளில் புலம் பேர்ந்து வாழும் மக்களின் தொகை 45 லட்சத்தால் அதிகரித்துள்ளது என்றும்
குறிப்பாக 65 லட்சம் மக்கள் சிரிய நாட்டுக்குள் மட்டும், அங்கு இடம் பெறும் மக்கள் போரால், அகதிகள் ஆக்கப்பட்டுள்ளனர் என்றும், 25 லட்சம் மக்கள் பிற நாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர் என்றும்,  UNHCR தெரிவித்துள்ளது. Read more

ஆசிய நாடுகளில் சித்திரவதை வாழ்வில் யதார்தமாக உள்ளது தடுக்கப்படவேண்டும்.- சர்வதேச மன்னிப்புச்சபை

aiஇலங்கை, இந்தியா, பாகிஸ்தான், சீனா உட்பட ஆசிய நாடுகளில், சித்திரவதை வாழ்வில் யதார்தமாக உள்ளதெனவும் இதற்கு எதிராக நடவடிக்கை  எடுக்கப்பட வேண்டுமெனவும்  சித்திரவதை என்பது ஆசிய நாடுகளில் பரவலாக  காணப்படுகின்றது. இந்த பிரச்சினை ஒரு சர்வாதிகார நாடுகளுடன் மட்டுப்படுத்தப்பட்டதாக இல்லை. இது இந்த பிராந்தியம் முழுவதற்கும் உரியதாக உள்ளது எனவும்  ஆசிய நாடுகளில் சித்திரவதையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தமது பொறுப்பை பேச்சுடன் நிறுத்திவிட கூடாது எனவும் சர்வதேச ஓப்பந்தங்களில் கையொப்பமிடுவது முக்கியமானதே. ஆனால் அது மட்டும் போதுமானது அல்ல. அதை செயல் மூலமும் வெளிப்படுத்த வேண்டும் எனவும் சீனா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, பாகிஸ்தான், இலங்கை, வியட்நாம் போன்ற நாடுகளில் ஒப்புதல்; வாக்குமூலம் பெறவும், செயற்பாட்டாளர்களை செயற்படவிடாமல் தடுக்கவும், சித்திரவதை பயன்படுத்தப்படுகின்றது.  மியன்மார், நேபாளம் போன்ற நாடுகளில் சித்திரவதையில் இருந்து தப்பிக்கொள்ள கப்பம் கொடுக்க முடியாத ஏழைகளிடம் பணம் பெற்றுக்கொள்ள சித்திரவதை பயன்படுத்தப்படுகின்றது. கடந்த 5 வருட காலத்தில் உலகில் குறைந்தபட்சம் 141 நாடுகளில்  சித்திரவதையும் வேறு மோசமான வழிகளும் பயன்படுத்தப்படுவதாகவும்.  பல ஆசிய – பசுபிக் நாடுகளில் சித்திரவதையின் பயன்பாடும் வேறு கொடூரமான மனித தன்மையற்ற அல்லது கேவலப்படுத்தும் தண்டனைகள் சாதாரணமானவை எனவும், அவை உயர்மட்ட குற்றச்செயல்களுக்கு உரிய தண்டனையை எனவும் பலரால் ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும் சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசிய – பசுபிக் பணிப்பாளர் ரிச்சர்ட் பெனர்ட் ‘சித்திரவதையை நிறுத்து’ எனும் பிரச்சார இயக்கத்தை ஆரம்பித்து வைத்த சந்தர்ப்பத்தில் கூறியுள்ளார்.

ஐ.நாவில் 1984 ஆம் ஆண்டு சித்திரவதைக்கு எதிரான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு  30 வருடங்கள் கழிந்த பின்னரும்  குறைந்தபட்சம் 23 ஆசிய, பசுபிக் நாடுகளில்  தற்போதும் சித்திரவதை  இடம்பெறுகிறது என சர்வதேச மன்னிப்புச்சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்வுக் குழுவிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு கூட்டமைப்பு நிராகரிப்பு

1719856666tna3இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் பங்கேற்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீண்டும் விடுத்திருக்கும் அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நிராகரித்துள்ளனர். பல தசாப்தங்களாக நீடித்திருக்கும் இனப்பிரச்சினையை ஒரு காலக்கெடுவுக்குள் தீர்ப்பதற்கு நாடாளுமன்றத் தேர்வுக் குழுவாலேயே முடியும். இலங்கையில் தமிழர்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம். நல்ல பல சந்தர்பங்கள் கூட்டமைப்பின் நிலைப்பாட்டாலேயே வெற்றிபெறவில்லை என்றும், அதுபோன்ற ஒரு நிலை மீண்டும் ஏற்படக் கூடாது எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுகிறார். இப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசுக்கும், கூட்டமைப்புக்கும் இடையே ஒரு அனுசரணையாளராக பேச்சுவார்த்தைகளை தொடங்க தென் ஆப்ரிக்கா உதவ முன்வந்துள்ள நிலையில், அதற்கு குந்தகம் ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கையே அமைச்சரின் முன்னெடுப்பு என்றும். நாட்டின் வடக்கே இராணுவத்தின் பிரசன்னம், ஆட்கள் கைது செய்யப்படுவது போன்ற பிரச்சினைகளையே தீர்க்க முடியாத அமைச்சரால் இனப் பிரச்சினைக்கான தீர்வில் என்ன பங்காற்ற முடியும். நாடாளுமன்றத் தேர்வுக் குழுவுக்கு வருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரிப்பதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார். மேலும் நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் மூலமாக ஒரு தீர்வு எட்டப்படாவிட்டால் அரசில் தொடருவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டியத் தேவை ஏற்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளதையும்   கூட்டமைப்பினர் விமர்சித்துள்ளனர்.

நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக வாழும் மக்கள் எங்கே செல்வார்கள்? -தலைமன்னார்

imagesமன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட தலைமன்னார் ஸ்டேசன்  பகுதியில் வாழ்ந்து வரும் குடும்பங்களில் சுமார் 22 குடும்பங்களை எதிர்வரும் 14 தினங்களுக்குள் அப்பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் என புகையிரத திணைக்கள அதிகாரிகள் எழுத்து மூலம் கோரிக்கை விக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவ்விடம் புகையிரத நிலையத்திற்கு சொந்தமானது என்றும் புகையிரத நிலைய நிர்வாகத்தினால் அறிவித்தல் பலகையும் நாட்டப்பட்டுள்ளது. அத்துடன் புகையிரத காணியில் அனுமதியில்லாமல் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றிக்கொள்ளுதல் எனும் தலைப்பில் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவ்விடத்திற்கு செவ்வாய்க்கிழமை சென்று பார்வையிட்டார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், தலைமன்னார் ஸ்டேசன் பகுதியில் புகையிரத நிலையத்திற்கு சொந்தமானது என கருதப்படும் குறித்த பகுதியில் சுமார் 40 தொடக்கம் 45 வருடங்களுக்கு மேலாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். குறித்த காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களும் உள்ளது. குறித்த பகுதியில் உள்ள 22 வீடுகளில் பல வீடுகள் நிரந்தரமான வீடுகள், தற்காலிக கொட்டில்கள் சிலவற்றிலும் மக்கள் வாழ்கின்றனர். அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அரச சார்பற்ற அமைப்புக்களினால் ஏற்கெனவே வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் புகையிரத தலைமையகத்தினால் தலைமன்னார் ஸ்டேசன் கிராம அலுவலகர் ஊடாக கடந்த திங்கட்கிழமை முதல் குறித்த 22 பேருக்கும் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 40 தொடக்கம் 45 வருடங்களுக்கு மேலாக பரம்பரை பரம்பரையாக மக்கள் வாழ்ந்து வருகின்ற குறித்த காணியிலிருந்து எங்களை எழும்பிச் செல்லுமாறு கூறினால் நாங்கள் எங்கு செல்வது என அந்த மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

விடத்தல்பளை கமலாசனி வித்தியாசாலை மாணவர்களுக்கு புளொட் தலைவர் ஊடாக உதவி-

P1040288P1040283

யாழ். விடத்தல்பளை, உசன் கமலாசனி வித்தியாசாலையைச் சேர்ந்த 189 பிள்ளைகளுக்கு இன்றையதினம் பாதணிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.  பாடசாலையின் அதிபர் திரு. நாகேந்திரன் அவர்களது தலைமையில் இன்றுபகல் 12மணியளவில் நடைபெற்ற மேற்படி நிகழ்வின் அதிதிகளாக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் செல்வம் என்றழைக்கப்படுகின்ற திரு.தயாபரன் அவர்களும் கலந்துகொண்டு பிள்ளைகளுக்கான பாதணிகளை வழங்கிவைத்தனர். இரண்டு லட்சத்து ஐயாயிரம் ரூபாய் (205,000) பெறுமதியான மேற்படி பாதணிகளை புளொட்டின் சுவிஸ்கிளையைச் சேர்ந்த லெனின் என்கின்ற சிவகுரு செல்வபாலன் அவர்கள் தனது புதல்வர்களான ஈழதர்சன், யாழிசன் ஆகியோரின் பிறந்த தினத்தை முன்னிட்டு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இங்கு உரையாற்றிய புளொட் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், இந்த பிள்ளைகளுக்கு பாதணிகளை வழங்குவதற்காக எமது சுவிஸ் கிளையைச் சேர்ந்த சிவகுரு செல்வபாலன் (லெனின்) அவர்கள் இந்த உதவியை செய்திருக்கின்றார். அதுபோல பலரும் இப்போது முன்வந்து இவ்வாறான உதவிகளை செய்து வருகின்றனர்.  ஏனென்றால் தற்போது எமது சமூகம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்த சமூகம் கல்வியிலே முன்னேற வேண்டுமென்பதற்காகவே அவர்கள் இத்தகைய உதவிகளை செய்கின்றார்கள். ஆகவே, இந்த உதவிகள்மூலம் உரிய பயனைப் பெற்றால்தான் இன்னும் தொடர்ந்து உதவிகளைச் செய்ய வேண்டுமென்ற ஓர் ஆர்வம் உதவி செய்பவர்களுக்கும் உருவாகும். எனவே இதற்காக பிள்ளைகள் அனைவரும் மிகவும் கவனமாகவும் அக்கறையுடனும் தமது கல்வியினைக் கற்கவேண்டும். அத்துடன் மிகவும் வறுமைக் கோட்டின்கீழ் உள்ள குழந்தைகள்தான் இங்கு பெரும்பான்மையாக கல்வி கற்கின்றனர். இந்தக் குழந்தைகளின் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளைத் தான் நாங்கள் Read more

சிறீநகர் முன்பள்ளிக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு-

sri nagar munpalli uthavi (1) sri nagar munpalli uthavi (2) sri nagar munpalli uthavi (3) sri nagar munpalli uthavi (5) sri nagar munpalli uthavi (6) unnamed2 unnamed3வவுனியா பூந்தோட்டம் சிறீநகர் தங்கண்ணா மலரும் அரும்புகள் முன்பள்ளியினரின் வேண்டுகோளிற்கு இணங்க புளொட் முக்கியஸ்தரும், வவுனியா முன்னைநாள் உப நகரபிதாவும், கோயில்குளம் இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான திரு. க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் ஒழுங்கமைப்பில் லண்டனில் வசிக்கும் தோழர் தர்மலிங்கம் நாகராஜா அவர்களால் அன்பளிப்பு செய்யப்பட்ட கற்றல் உபகரண தொகுதிகள் இன்று (13.05.2014) கையளிக்கப்பட்டுள்ளது. இன்றைய நிகழ்வில் புளொட் முக்கியஸ்தரும், வவுனியாவின் முன்னாள் உப நகர பிதாவும், கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), கோவில்குளம் இளைஞர் கழகத்தைச் சேர்ந்த ஓவியன், நிகேதன், காண்டீபன், செல்வம் ஆகியோரும், சிறீநகர் கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினரும், சிறீ துர்க்கை அம்மன் ஆலய பரிபாலன சபையின் செயலருமான திரு எஸ்.தர்மகுலசிங்கம், சிறீநகர் கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர் சதீஸ், மாதர் அபிவிருத்திச்சங்க தலைவி திருமதி. ஸ்ரீரஞ்சன், பொருளாளர் திருமதி சாந்தகுமாரி, தங்கண்ணா மலரும் அரும்புகள் முன்பள்ளி தலைவி திருமதி ஜீவகேஸ்வரி, செயலாளர் திருமதி ஜான்சி, முன்பள்ளி ஆசிரியை செல்வி நிரோஜினி, பெற்றோர்கள், மாணவர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். Read more

தொல்புரம் கலைவாணி நிலையத்தின் ஆண்டுவிழா நிகழ்வு-

unnamed

யாழ். தொல்புரம் மேற்கு கலைவாணி சனசமூக நிலையத்தின் ஆண்டுவிழா கடந்த 11.05.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை இடம்பெற்றது இந் நிகழ்வில் வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் அக் கிராமத்தினை சேர்ந்த சிறந்த சமூக சேவையாளரான திரு சுப்பர் பஞ்காட்சரம் அவர்களுக்கு சமூகஜோதி எனும் கௌரவத்தினை வழங்கி கௌரவித்தார். இதன்போது வலிமேற்கு தவிசாளரால் வழங்கப்பட்ட கௌரவ விருதினை வட பிராந்திய நல்லொழுக்க சம்மேளன பொருளாளர் திரு.வ.சிவலிங்கம் அவர்கள் வழங்க திரு.சுபபர் பஞ்சட்சரம் அவர்கள் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வின்போது சங்கத் தலைவர். செயலர் மற்றும் பொருளாளரும் பங்கேற்றிருந்தனர். இதன்போது சைக்கிள் ஓட்டப் போட்டியில் வெற்றிபெற்ற வீரருக்கு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சங்கானை பிரதேச அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திரு சதாசிவம் ஐங்கரன் அவர்கள் பதக்கம் அணிவித்து கௌரவித்தார். இதன்போது வலிமேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் தனது மாதாந்த கொடுப்பனவுகளின் ஊடாக 28 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் வழங்கினார். தவிசாளர் திருமதி நாகரஞ்சனி ஐங்கரன் அவர்கள் பதவியேற்று முதன் முதலில் மேற்படி சனசமூக நிலையத்திற்கு விஜயம் செய்து தனது மாதாந்த கொடுப்பனவின் ஊடாக சனசமூக நிலையத்திற்கான மின் விநியோகத்தினை வழங்கி ஆரம்பித்து வைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இராணுவ பிரதானியாக மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க நியமனம்-

இலங்கை இராணுவ அதிகாரிகளின் பிரதானியாக மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 17ஆம் திகதி சனிக்கிழமை முதல் இவரது நியமனம் அமுலுக்கு வரும் என்று இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது. தற்போது இராணுவ அதிகாரிகளின் பிரதானியாக உள்ள மேஜர் ஜெனரல் கிரிஷாந்த சில்வா, எதிர்வரும் 17ஆம் திகதிமுதல் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமனம் பெற்றுச் செல்லவுள்ளார். இந்நிலையிலேயே, இராணுவ அதிகாரிகளின் பிரதானி வெற்றிடத்துக்கு பிரசாத் சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். 33 வருடகால இராணுவ சேவையிலுள்ள சமரசிங்க, யுத்த காலத்தின்போது இராணுவ பேச்சாளராகச் செயற்பட்டார். இவர், பிரிட்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகவும் கடமையாற்றியவர்.

யாழ். பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்-

யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் நாளைமுதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளன. பல்கலைக்கழக பேரவையின் தீர்மானத்திற்கு அமைய, கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக யாழ்.பல்கலைகழக உப வேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் அண்மையில் தெரிவித்திருந்தார். யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 20ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கமைய, யாழ்.பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் சகல மாணவர்களும் விடுதிகளிலிருந்து வெளியேற வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. விடுதிகளிலிருந்து வெளியேறும் மாணவர்களை 20ஆம் திகதி நண்பகல் 12 மணிக்குப் பின்னர் சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. யாழ் பல்கலைகழகத்தின் கல்வி நடவடிக்கைகள் நாளைமுதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என கடந்தவாரம் பல்கலைக்கழக பதிவாளரால் கையொப்பமிடப்பட்டு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மே 18 தடை குறித்து ஐ.நா அவதானம்-

இறுதிப்போரின் போது உயிரிழந்த உறவுகளுக்கு வடக்கு மக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளுக்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளமை குறித்து அவதானம் செலுத்தவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் நாளாந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று நியூயோர்க்கில் நடைபெற்ற போது, கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கிய பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக், அந்த தடை குறித்து தாம் அறியவில்லை. எனினும் அது தொடர்பில் ஆராய்வதாக குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய கடந்த வாரம் விடுத்திருந்த எச்சரிக்கை ஒன்றில் போரில் இறந்தவர்களுக்காக பொதுநிகழ்வுகள் நடத்தப்படுவதை அனுமதிக்க முடியாது என்று கூறியிருந்தார். எனினும் தனிப்பட்டவர்கள் சமய நிகழ்வுகளை நடத்தலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில் அரசாங்கம் போர் முடிவுக்கு வந்ததாக கூறும் மே 18ஆம் திகதியன்று மாத்தறையில் கொண்டாட்ட நிகழ்வை நடத்தவுள்ளது.

இலங்கையில் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் தரிப்பு-

பாகிஸ்தான் கடற்படையினரின் கப்பல் ஒன்று செவ்வாய் முதல் 03 நாட்கள் விஜயம் மேற்கொண்டு கொழும்புத் துறைமுகத்தை இன்று வந்தடையவுள்ளது. நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்கள் அடிக்கடி இலங்கை துறைமுகத்துக்கு வருகின்றன. இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் அமையவுள்ளது. மேற்படி இரு நட்பு நாடுகளுக்கும் இடையிலுள்ள வலுவான பாதுகாப்பு, கலாசார, பொருளாதார, இராஜதந்திர உறவுகளை பி.என்.எஸ்.சாம்ஸீர் என்ற இந்தக் கப்பலின் வருகை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

4,000 கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை-

நாட்டில் சுமார் 4,000 கிராம உத்தியோகத்தர்களை விரைவில் புதிதாக இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவிக்கின்றது. நாடெங்கிலும் 4,400 கிராம உத்தியோகத்தர்களுக்கான பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாக அமைச்சர் டபிள்யூ ஜே செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார். சுமார் 500 உத்தியோகத்தர்கள் இதுவரையில் தமது நியமனங்களை பொறுப்பேற்கவில்லை எனவும், எனவே பரீட்சையின் புள்ளிகளுக்கு அமைய, ஏனையவர்களை பதவிக்கு இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

யாழில். 1500 குருதிக் கொடையாளர்கள் கௌரவிப்பு-

yaalil iraththa kodaiyaalikalசர்வதேச குருதிக் கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு 1500 குருதிக் கொடையாளர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர் இந்நிகழ்வு எதிர்வரும் 4ம்திகதி யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கிக்கு பொறுப்பாகவுள்ள குருதி மாற்று வைத்திய நிபுணர் கே.சி.டி.செனிவரத்தின தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பிரதேசத்திற்கு உட்பட்ட குருதிக்கொடை நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் ஏற்பாட்டாளர்களுக்கு இடையிலான கூட்டம் இன்று யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இடம்பெற்றது. அங்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சிரானி பண்டாரநாயக்க வழக்கு ஒத்திவைப்பு-

முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஆகஸ்ட் 4ஆம் திகதிக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிடிய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். சிரானி பண்டாரநாயக்க நிரபராதியா? குற்றவாளியா என நேற்றைய வழக்கு விசாரணைகளின்போது தீர்ப்பளிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சிரானியின் வங்கி தகவல்கள் குறித்த அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும், அதனை சமர்ப்பிப்பதற்கு பிரதிவாதிகள் இடையூறு விளைவித்ததாகவும் சிரானி தரப்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி வாதாடினார். இதன் காரணமாக அவ்வறிக்கை நீதிமன்றில் ஒப்படைக்கும்வரை வழக்கு மீதான தீர்ப்பை வழங்க வேண்டாம் என அவர், நீதவானிடம் கேட்டுக் கொண்டார். இதன்படி சிரானியின் குறித்த வங்கி தகவல்களை எதிர்வரும் 20ஆம்திகதி முன்வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இலங்கைத் தம்பதியை கைதுசெய்ய இன்டர்போல் உதவி-

தமிழகத்திற்கு அகதியாக சென்ற இலங்கைத் தமிழர்கள் இருவரை (தம்பதி) கைது செய்ய, இன்டர்போல் பொலிஸாரின் உதவியை இலங்கை அரசாங்கம் நாடியிருப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவு பகுதியிலிருந்து கடந்த மே 5ஆம் திகதி தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்கு 2 தனித்தனிப் படகுகளில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 10 பேர் அகதிகளாக சென்றனர். இலங்கை இராணுவத்தினரால் எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. இதனால் உயிர்ப் பிழைப்பதற்காகவே அகதிகளாக ராமேஸ்வரம் வந்தோம் என்று அவர்கள் தெரிவித்திருந்தனர். முன்னதாக, அகதிகளாக வந்த கதிர்வேலு தயாபரராஜா மற்றும் அவரது மனைவி உதயகலா ஆகிய இருவரும் பல்வேறு பண மோசடியில் ஈடுபட்டதாக இலங்கையிலுள்ள பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Read more

தாதியர்தினம்

892645146Nurses-Day

முன்கூட்டிய வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள்-

mun koottiya vaakkaalar idaappuவாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் எதிர்வரும் 16ம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் வாக்காளர் இடாப்பு திருத்தம் டிசம்பர் 31ம் திகதியே நிறைவு செய்யப்படுகின்ற போதும் இம்முறை இரண்டு மாதங்களுக்கு முன்னரே நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வருடம் வாக்காளர் இடாப்பு திருத்தம் 5 மாதங்கள் இடம்பெறவுள்ள நிலையில் ஒக்டோபர் 31ம் திகதி நிறைவு செய்யப்படவுள்ளது. எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி அல்லது பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என பரவலாக பேசப்படுகிறது. இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என்று அரசியல் களத்தில் பேசப்பட்டுவரும் நிலையில் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அரசாங்கத்திற்குள் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாகவும் தெரியவருகிறது.

மனைவியை வெட்டிக் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை-

untitledமுல்லைத்தீவு, வள்ளிபுனம், கரித்தாஸ் கியுடெக் வீட்டத்திட்டப் பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலைசெய்த கணவன், தானும் தற்கொலை செய்துகொண்டதாக புதுக்குடியிருப்பு பொலீசார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் அருமைநாயகம் அருள்ராஜ் (வயது 30) என்பவரும், அவரது மனைவியான அருள்ராஜ் செல்வகுமாரி (வயது 28) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர். இருவருக்குமிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக படுக்கையிலிருந்த மனைவியை, கணவன் கத்தியால் வெட்டிக்கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து வீட்டிலிருந்து சுமார் 500 மீற்றர் தூரத்திலுள்ள காட்டினுள் கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் இரு பிள்ளைகள் உள்ளனர். சம்பவத்தைக் கண்ட இவர்களின் பிள்ளைகள் இவ்விடயம் தொடர்பாக அயலவர்களுக்குத் தெரிவித்துள்ளனர். அயலவர்கள் பொலீசாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து இரண்டு சடலங்களையும் நீதவானின் உத்தரவிற்கமைய பொலீசார் மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

தென்னிலங்கை செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பினருடன் சந்திப்பு-

1719856666tna3யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள தென்னிலங்கையைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவொன்று மனித உரிமைச் செயற்பாட்டாளர் நிமல்கா பெர்னாண்டோ தலைமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்துப் பேச்சுக்கள் நடத்தியள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் நேற்று இரவு நடைபெற்ற இச் சந்திப்பின்போது, இலங்கை முழுதும் இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்கள், இராணுவ அடக்குமுறைகள், ஜனநாயக விரோதச் செயற்பாடுளுக்கு எதிராக வடக்கு கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த சிவில் அமைப்புக்களும் தென்னிலங்கை அமைப்புக்களும் இணைந்து செயற்படுவது பற்றியும் அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்ப அரசியல் ரீதியான ஒத்துழைப்பை வழங்குவது பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்துள்ளனர்.

மீனவர் பேச்சுவார்த்தையின்போது இந்தியா தரப்பால் யோசனை முன்வைப்பு-

meenavar pechchuvaarthaiyinpothuஇந்திய – இலங்கை மீனவர்களுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை ஏற்படுத்தி அதன் அடிப்படையில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இணக்கம் எட்டப்பட வேண்டும் என இந்திய மீனவர்கள் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர். இந்திய – இலங்கை மீனவர்களுக்கு இடையில் கொழும்பில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்த வேண்டுக்கோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து வருகை தந்த 19 மீனவர்களும் 8 அதிகாரிகளும் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்ததுடன் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளும் இந்த சந்திப்பின்போது பிரசன்னமாகியிருந்தனர். மற்றும் இலங்கை மீனவ சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 20 உறுப்பினர்களும் 10 அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்கு அத்துமீறி நுழைந்து சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றமை தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருந்தது எனினும் சட்டவிரோத மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் தாம் ஈடுபடவில்லை எனவும் இந்திய அரசாங்கத்தினால் இதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பேலியகொடை நகரசபை உறுப்பினர் சுட்டுக்கொலை-

07787களனி, பேலியகொடை நகர சபை உறுப்பினர் ஒருவர், தளுகம பழைய கண்டி வீதியில் தனது வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். நகர சபை உறுப்பினரான சாமின் சந்தருவன் என்பரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் பொலீசார் கூறியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பேலியகொடை பொலீசார் மேற்கொண்டுள்ளனர்.

மீன்பிடி படகுகளுக்கு அனுமதிப் பத்திரம் பெறுமாறு அறிவுறுத்தல்-

meenpidi padaku anumathi perumaaruமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து மீன்பிடி படகுகளுக்குமான அனுமதிப் பத்திரங்களை பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட கடற்றொழில் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொள்ளாத மீனவர்கள் மற்றும் படகுகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் டொமினிக்கோ ஜோர்ஜ் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பிரதி பொலிஸ் மாஅதிபராக காமினி மத்துரட்ட நியமனம்-

கொழும்பு பிரதி பொலிஸ் மாஅதிபர் பதவிக்கு காமினி மத்துரட்ட நியமிக்கப்பட்டுள்ளார், கொழும்பு பிரதி பொலிஸ் மாஅதிபராக கடமையாற்றி வந்த எஸ்.ஏ.டி.எஸ். குணவர்தன பொலிஸ் ஊக்குவிப்பு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதற்கமைய காலி பொலிஸ் பிராந்தியத்திற்கு பொறுப்பாக இருந்த பிரதி பொலிஸ் மாஅதிபரல் காமினி மத்துரட்ட இன்றையதினம் முதல் கொழும்பு பிரதி பொலிஸ் மாஅதிபராக செயற்படவுள்ளார்.