ஐ.நா பிரதிநிதியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சு-

1719856666tna3ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைகளை முன்னெடுப்பது குறித்து ஆராய்வதற்காக இலங்கை வந்துள்ள ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி செயலர் ஒஸ்கார் பெர்ணான்டஸ் தரங்கோ, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்றும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இலங்கையிலுள்ள ஐ.நா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இன்றுகாலை இந்தப் பேச்சு நடைபெற்றது. இதில், கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினர் பங்கேற்றிருந்தனர். இதன்போது இடம்பெயர்ந்த மக்களை சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தி, புனர்வாழ்வு வழங்கி, சுயமாக வாழ வசதி ஏற்படுத்திக் கொடுத்தல். போரின்போதான மீறல் சம்பவங்களுக்குப் பொறுப்புக் கூறல். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணுதல் என்ற மூன்று முக்கிய விடயங்களும் அரசினால் பொறுப்பான வகையில் மேற்கொள்ளப்படவில்லை என்றும், வட மாகாணசபையை சுதந்திரமாக இயக்குவதிலுள்ள நெருக்கடிகள், காணிகள் அரசினால் கையகப்படுத்தல், தமிழர் பகுதிகளில் இராணுவத் ததலையீடுகள் என்பன பற்றியும் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் ஐ.நா பிரதிநிதிக்கு விளக்கினர்.

அளுத்கம வன்முறை குறித்து ஐ.நா அறிக்கை கோரல்-

ainaa pirathinithiyudan (2)அளுத்கமவில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் அரச உயர் மட்டத்தினரிடம், இலங்கைக்கு வந்துள்ள ஐ.நாவின் உதவிச் செயலர் எழுத்துமூல அறிக்கை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு நான்கு நாள் விஜயமாக வந்துள்ள ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் ஒஸ்கார் பெர்னாண்டஸ் தரங்கோ, பல தரப்பினருடன் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றார். கடந்த 15ஆம் திகதி அளுத்கம நகரில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் இடம்பெற்றன. இந்த வன்முறைகளில் மூவர் கொல்லப்பட்டிருந்தனர். இவ்விடயம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபையிலும் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் எழுத்துமூல அறிக்கையை, அரச உயர்மட்டத்திலிருந்து ஐ.நா. உதவிச்செயலர் கோரியுள்ளார். இருப்பினும் அறிக்கையை வழங்குவது தொடர்பில் இலங்கை அரச உயர்மட்டம் இன்னமும் தீர்மானிக்கவில்லை என கூறப்படுகின்றது. இலங்கையின் நிலைமைகள் தொடர்பில் பல தரப்பட்டவர்களுடனும் கலந்துரையாடல்களை நடத்தி வரும் ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர், தனது இலங்கைப் பயணத்தின் முடிவில் ஐ.நா பொதுச் செயலாளருக்கும், பாதுகாப்புச் சபைக்கும் விசேட அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பொலநறுவை விகாராதிபதி கொலை-

imagesமாத்தளை,எலஹேர பிரதேசத்தில் எலஹேர பக்கமுன ஹீரடியே புண்ணியவர்தன விஹாராதிபதி அலகொலமட தம்மரத்ன(வயது 47 படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கொலைச் சம்பவம் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார். சந்தேகநபரை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த படுகொலையுடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும் நபரின் பாதணி ஜோடி, சிகரெட் மற்றும் மதுபான போத்தலொன்று விஹாரை வளாகத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

ஆஸியில் மற்றுமொரு இலங்கையர் தற்கொலை முயற்சி

australiaஇலங்கையில் இருந்து அகதியாக அவுஸ்திரேலியா சென்று தஞ்சமடைந்த மற்றுமொரு இலங்கையர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக அவுஸ்திரேலியாவின் தமிழ் அகதிகளுக்கான சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு மீண்டும் திரும்பிச்சென்றால் சித்திரவதை அடையவேண்டும் என்ற அச்சத்தினாலேயே இவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என அவுஸ்திரேலிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இவர் தற்போது அவுஸ்திரேலியாவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார். இவர் 2012ஆம் ஆண்டு படகில் அவுஸ்திரேலியாவுக்கு வந்து தஞ்சமடைந்தவர் என்றும் ஆஸி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் இலங்கை மாணவி மருத்துவம் கற்பதற்கு மறுப்பு-

thamilakaththil ilankai maanavi (2)தமிழக அகதி முகாமில் உள்ள இலங்கை மாணவி ஒருவருக்கு தமிழ் நாட்டின் மருத்துவ கல்லூரியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடந்த பிளஸ் டு தேர்வில் 1170 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும், அவர் அகதி மாணவி என்பதை காரணம் காட்டி அரசாங்க மருத்து கல்லுரி அவரது விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது. இது தொடர்பில் அரச அதிகாரி ஒருவரிடம் த ஹிந்து பத்திரிகை வினவியபோது. இலங்கையைச் சேர்ந்த அகதி மாணவர்களுக்கு பொறியியல் துறையில் கல்லூரி அனுமதி வழங்கப்படுகின்ற போதும், மருத்து கல்வி அனுமதிக்கான ஒதுக்கீடு இன்னும் அரசாங்கத்தினால் அறிவிக்கப்படவில்லை என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டவரை நாடுகடத்த முடியும்-சூலாநந்த பெரேரா-

velinaattavarai naadu kadaththaஇலங்கையில் சட்டவிரோதமான முறையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களை நாடுகடத்துவதற்கு இலங்கைக்கு எந்த தடையும் இல்லை என குடிவரவு மற்றும் குடியழ்வு கட்டுப்பாட்டு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் சூலாநந்த பெரேரா தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் அஹமதியா சமூகத்தைச் சேர்ந்த அகதிகளும், அங்கு சிறுபான்மையாக வாழ்கின்ற கிறிஸ்த்தவர்களும் இலங்கையில் அகதி அந்தஸ்து கோரியுள்ளனர். இவ்வாறு 142 பாகிஸ்தானியர்கள் கொழும்பு மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் சட்ட விரோதமாக தங்கியுள்ளனர். இவர்களை நாடு கடத்துவது சர்வதேச சட்டத்தை மீறுவதாகும் என ஐ.நா அகதிகள் பேரவை தெரிவித்திருந்தது. எனினும் பாகிஸ்தானிய அகதிகள் நாட்டில் பதிவு செய்யப்படுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கயிருக்கவில்லை எனவும், இதனடிப்படையில் அவர்களை நாடுகடத்த இலங்கைக்கு அதிகாரம் இருப்பதாகவும் குடிவரவு கட்டுப்பாட்டாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய கல்வியற் கல்லூரியில் ஆயுதங்கள் மீட்பு-

thesiya kalviyiyat kalloori (2)யாழ். கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் கிணற்றில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. கல்வியற் கல்லூரியில் உள்ள கிணற்றினை துப்பரவாக்கும்போது ஆர்.பி.ஜி ஷெல் -01 கைக்குண்டு -01 அமுக்கவெடி 01 ஆகியன கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து கல்லூரி அதிபரால் கோப்பாய் பொலிஸ் மற்றும் இராணுவத்திற்கு தகவல் வழங்கப்பட்டது. அதனையடுத்து இன்றுகாலை அவை இராணுவத்தினரால் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.