கூழாங்குளம் இந்து மயானத்தில் சடலத்தை தகனம் செய்ய அனுமதி மறுப்பு-

koolankulam (2)koolankulamவவுனியா, கொக்குவெளி வீதியில் உள்ள பேயாடி கூழாங்குளம் இந்து மயானத்தில் இன்றுகாலை சடலம் ஒன்றினை தகனம் செய்ய சென்றபோது இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் இராணுவத்தினருடன் கலந்துரையாடியதை அடுத்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பேயாடி கூழாங்குளம், கொக்குவெளி, பூனாமடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த தமிழ் மக்களின் பாராம்பரியமான இந்து மயானமே பேயாடிகூழாங்குளம் இந்து மயானம். யுத்தம் காரணமாக இப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்து சென்று வேறுவேறு பகுதிகளில் வசித்துவரும் நிலையில் அப் பகுதிக்கு அண்மித்ததாக திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பேயாடி கூழாங்குளத்தைச் சேர்ந்த ஒருவர் மரணமடைந்தமையால் தமது பாரம்பரிய சம்பிரதாய முறைப்படி அப்பகுதி இந்து மயானத்தில் உடலை தகனம் செய்யவதற்கான ஆயத்த வேலைகளைச் செய்வதற்கு மரணமடைந்தவர்களின் உறவினர்கள் சென்றபோது பெரும்பான்மை இன மதகுரு ஒருவரும் அப்பகுதி இராணுவத்தினரும் இணைந்து இது பௌத்த மக்களின் பிரதேசம். இங்கு பௌத்த அடையாளங்கள் இருக்கின்றன என இராணுவ முகாம் இருந்த பகுதியில் உள்ள அடையாளங்களைக் காட்டி அனுமதி மறுத்துள்ளனர். இதனையடுத்து அங்கு திரண்ட இளைஞர்களும் மக்களும் இராணுவத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன்போது அங்கு வருகை தந்த வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம், இது எனது பிரதேசம். இங்கு எனது உறவினர்களுக்கும் காணிகள் உண்டு. நாம் பரம்பரை பரம்பரையாக பராமரித்து வந்த நிலம். இங்கு தான் எமது மக்களின் தகனக் கிரியைகள் நடைபெற்று வந்தன. இதனை எப்படி தடுக்க முடியும் எனக் கூறி இராணுவத்தினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்பின் இராணுவத்தினர் தகனக் கிரியை செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

இலங்கையிலிருந்து ஊடுருவல், கடலோர பாதுகாப்பை இந்தியா பலப்படுத்துகிறது-

imagesஇலங்கை ஊடாக இந்தியாவுக்குள் தீவிரவாதிகளின் ஊடுருவல் மற்றும் கடத்தல்களை தடுப்பதற்காக தொடர்ந்தும் கரையோர பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளது. கடந்த வாரம் இது தொடர்பான முக்கிய கூட்டம் ஒன்று அண்மையில் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது. இக் கூட்டத்தில் கரையோர பாதுகாப்பு பிரிவினர், கியூ பிரிவினர், புலனாய்வுப் பிரிவினர், கரையோர காவல்துறையினர், வனத்துறையினர் உட்பட்ட பல அதிகாரிகளும் பங்குபற்றியிருந்தனர். இதன்போது இலங்கைக்கு ஊடாக தென்னிந்தியாவுக்குள் ஊடுருவும் தீவிரவாதிகள் மற்றும் கடத்தல்காரர்களை தடுப்பதற்காக தீவிரமான கண்காணிப்புகளை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்தியாவின் சகல பாதுகாப்பு பிரிவுகள் மத்தியிலும் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வது என்று இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி தனுஸ்கோடியில் உள்ள பாலம் என்ற இடத்தில் நான்கு பொலிஸ் அரண்களை அமைப்பதற்கு தீhமானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை வாசிக்க——- Read more