Header image alt text

மோடி நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்-புளொட் தலைவர் த.சித்தார்த்தன்

Sithar-ploteஇலங்கை ஜனாதிபதியுடனான முதலாவது சந்திப்பிலேயே இலங்கைத் தமிழரின் விவகாரம் தொடர்பில் மோடி பேசியிருப்பது இலங்கைத் தமிழ் மக்களுக்கு கிடைத்த நல்லதொரு சமிக்ஞையாக தோன்றும் அதேவேளை, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு ஒன்று கிடைக்கக்கூடிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்,

தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா, தான் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சக்தி என்பதை கடந்த தேர்தல் மூலம் நிரூபித்துள்ளதுடன், அண்மைக்காலமாக இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் கூடுதல் அக்கறை காட்டிவரும் சூழ்நிலையில், மோடியுடன் ஜெயலலிதா சந்திக்கும் வேளையில் இலங்கைத் தமிழரின் பிரச்சினை முக்கிய விடயமாக பேசப்படும் எனவும் இதுவே இன்று தமிழ்நாட்டினதும் புதிய மோடி அரசாங்கத்தினதும் நிலைப்பாடாக இருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிற்கு சிறிதுகாலம் விஜயம் செய்து அங்குள்ள அரசியல் பிரமுகர்களுடன் சந்திப்புக்களை நடத்தி, சமகால அரசியல் நிலைமை பற்றி அறிந்து நாடு திரும்பிய சித்தார்த்தன் அவர்கள் ஞாயிறு தினக்குரலுக்கு (01.06.20014) வழங்கிய பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். Read more

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு

Tamil_Daily_News_13875544072பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று டெல்லியில் சந்தித்து 50 நிமிடங்கள் பேசினார். அப்போது, தமிழகத்தின் நீண்ட கால வளர்ச்சி திட்டங்கள், மீனவர் பிரச்னை, சிறப்பு நிதி, கல்வி திட்டங்களுக்கான நிதி, மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்னை உட்பட பல்வேறு விஷயங்களை விவாதித்துள்ளார். பின்னர், மனு ஒன்றையும் பிரதமரிடம் அளித்தார். Read more

தேசிய பிரச்சினை தொடர்பில் ஆராய குழு-

1719856666tna3தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் ஒன்றை வரைவதற்கு அல்லது அதனை தயாரிப்பதற்கான குழுவொன்றை அமைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. யாழ். பருத்தித்துறை நீர்வேலியில் அமைந்துள்ள கூட்டமைப்பின் பணிமனையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் இதனைக் கூறியுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்காக ஒரு தீர்வுத் திட்டத்தை தயாரிக்க வேண்டும் எனவும் அந்த தீர்வுத்திட்டத்தை அமைக்க ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என தீர்மானித்திருந்தோம். அந்த தீர்மானத்தின் பிரகாரம் நாங்கள் பல்வேறுபட்டவர்களின் மத்தியில் இருந்து அவர்களுடைய கோரிக்கைகள் சிந்தனைகள் தீர்வுத்திட்டம் எவ்வாறு அமையவேண்டும் போன்ற கருத்துக்களை கேட்பதற்கு ஆலோசித்துள்ளோம். இதற்காக புதிய மின்னஞ்சல் முகவரி ஒன்றினை ஆரம்பித்துள்ளோம். நாங்கள் பொதுமக்களிடம் இருந்தும் பொது ஸ்தாபனங்களிடம் இருந்தும் அரசியல் அமைப்புக்களிடம் இருந்தும் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வில் அக்கறையுள்ள சகலரிடம் இருந்தும் அவர்களின் கருத்துக்களை தீர்வுத்திட்டம் தயாரிப்பதற்காக நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அதனை வnயிசழிழளயடளூபஅயடை.உழஅ என்னும் மின்னஞ்சல் முகவரியின் ஊடாகவோ அல்லது பருத்தித்துறை வீதி, நீர்வேலி தெற்கு, நீர்வேலி. எனும் முகவரியில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்திற்கோ அல்லது மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி அலுவலத்திற்கோ அதனை அனுப்பி வைக்கலாம். இவற்றினை இந்த மாத இறுதிக்குள் அனுப்பி வைத்தால் அதனை அடுத்து ஓரிரு மாதங்களில் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட ஒரு முழுமையான தீர்வுத்திட்டம் தயாரிக்கப்படும். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வரும் கருத்துக்கள் ஆலோசனைகளை உள்ளடக்கிய தீர்வுத்திட்டத்தை உருவாக்க பல்கலைகழக ஆசிரியர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் உள்ளடங்கிய குழுவொன்று அமைக்கப்படவுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய அகதிக் கொள்கையில் மாற்றம் வேண்டும் – பசுமை கட்சி

அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை அகதிகள் தற்கொலை செய்துகொள்வதன் மூலம், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அகதிக் கொள்கை தோல்வி கண்டுள்ளது என்பதையே எடுத்துக் காட்டுவதாக, அவுஸ்திரேலிய பசுமைக் கட்சி தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் செனட் சபை உறுப்பினர் சாரா ஹன்சன் இதனைக் கூறியுள்ளார். கடந்த சனிக்கிழமை தனக்கு தானே தீ வைத்துக்கொண்ட 29வயதான இலங்கை அகதியான லியோ சீமான்பிள்ளை என்பவர், மெல்போர்ன் வைத்தியசாலையில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இந்தநிலையிலேயே சாராஹ் ஹன்சன் இக்கருத்தை வெளியிட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் உள்ள அகதிகளின் உயிர்கள் பாதுகாக்கப்படும் வகையில் அவுஸ்திரேலிய அரசு தமது அகதிக் கொள்கையை மாற்றியமைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை அகதிகள், தாம் மீண்டும் நாடுகடத்தப்படுவதை விட, அங்கேயே மரணித்துவிடலாம் என்ற நிலையில் இருப்பதாக த கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது. நாடுகடத்தப்படுவோம் என்ற அச்சத்திலேயே பெரும்பாலான இலங்கை அகதிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதாகவும் அந்த பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கிடையில் கடந்த மாதம் மற்றுமொரு இலங்கை அகதி இலங்கைக்கு நாடுகடத்தப்படவிருந்த நிலையில், தமக்கு தாமே தீமூட்டி தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சீரற்ற காலநிலையால் 40ஆயிரம் பேர் பாதிப்பு-

rain_in_delhiநாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக 44ஆயிரத்து 88பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்றுமாலை வரையில் அசாதாரண காலநிலை காரணமாக 23 பேர் மரணித்துள்ளனர். அத்துடன். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 9 இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ஜிங் கங்கை மற்றும் களுகங்கை என்பனவற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளதனால் இரத்தினபுரி மற்றும் காலி மாவட்டங்களின் பல வீதிகள் தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நெலுவ – தெல்லவ, துலிஎல்ல – உடுகம, எல்பிட்டிய – பிட்டிகல மற்றும் அவித்தாவ ஆகிய வீதிகளில் போக்குவரத்து மேற்கொள்ள முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர, எத்கந்துர – அம்பேகம, வெலிவிட்டிய உள்ளிட்ட வீதிகளில் போக்குவரத்து மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரத்தினபுரி கலவான பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளமையால் அந்த பகுதிகளில் பயணிக்கும் வாகனங்கள் மாற்று பாதையை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது. இதனிடையே, கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியின் அஹெலியகொட மற்றும் குருவிட்ட பிரதேச பாதை வெள்ளநீரால் மூழ்கியுள்ளது.

பொலிஸ் அதிகாரம் தமிழ் மக்களுக்கான தீர்வாக அமையாது-ஜே.வி.பி

மாகாண சபைகளுக்கான பொலிஸ் அதிகாரங்களை கொடுப்பது தமிழ் மக்களுக்கான தீர்வாக அமையப் போவதில்லை. தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டுமாயின் சுயாதீன விசாரணையினை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜே.வி.பி.யின் பொதுச்செயலர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். தமிழர்கள் விடயத்தில் தமிழ் கட்சிகள் கூடிய கவனமெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது வடக்கில் சுதந்திரமானதும் தமக்கான உரிமைகளை பெற்றுக்கொள்ளும் தீர்வு ஒன்றினை மட்டுமே. யுத்த காலகட்டத்தில் புலிகள் செய்தவையும் பின்னர் இராணுவ அடக்குமுறைகளும் தமிழ் மக்களை பெரிதும் பாதித்து விட்டதென்பதே உண்மை. அதனை நிவர்த்திசெய்து சமூகங்களை ஒன்றிணைக்கும் வேலைத்திட்டம் இன்று அவசியமாகும். அதைவிடுத்து மாகாண சபைகளுக்கான அதிகாரங்களையும் பொலிஸ் அதிகாரங்களையும் கேட்பது தற்போது அவசியமற்றதே. யுத்த குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை; கோருவது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுயநல அரசியல் நோக்கிலேயே. சர்வதேச விசாரணையொன்று இடம்பெறுவதனாலோ நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை என அவர் மேலும் கூறியுள்ளார்.

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிஷா பிஷ்வால் இடையே சந்திப்பு

இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வாலை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். 10 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, அமெரிக்கா சென்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவே இவ்வாறு நிஷாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளது. இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து இந்த சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது. இந்த விஜயத்தில் ஆளும் மற்றும் எதிர் தரப்புக்களைச் சேர்ந்த 10 உறுப்பினர்கள் உள்ளடங்குவதுடன், குழுக்கான தலைமைத்துவத்தை அமைச்சர் சுமேதா ஜி.ஜயசேன வகிப்பதாக கூறப்படுகின்றது. இந்த சுற்றுப் பயணத்தில் பெண்கள் எதிர்நோக்குகின்ற பொதுவான பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளதாக, அமெரிக்காவிற்கு சென்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெணான்டோபுள்ளே சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டவிரோதமாக ஆஸி செல்ல முற்பட்டவர்கள் கைது-

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா செல்லும் நோக்கில் கொழும்பு புறநகர் மொறட்டுவ – லுனாவ  பிரதேசத்தில் விடுதியொன்றில் தங்கியிருந்த 13பேர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். மொறட்டுவ காவல்துறை பிரிவினர் நேற்று இரவு ரோந்து சென்ற வேலையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரின் மூலம் இவர்கள் அவுஸ்ரேலியாவுக்கு செல்லும் நோக்கில் ஒவ்வொறுவருக்கு தலா 10 ஆயிரம்  ரூபா வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. கடல் மார்க்கமாக அவுஸ்ரேலியாவுக்கு செல்லும் நோக்கில் இவர்கள் குறித்த விடுதியில் கடந்த மாதம் 26ஆம் திகதியில் இருந்து தங்கியிருந்தனர். கைது செய்யப்பட்டவர்கள் நெடுஞ்கேணி, முள்ளியவளை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.