Header image alt text

புலிகள் மீதான தடையை மீளாய்வு செய்ய தீர்ப்பாயம் அமைத்தது இந்திய அரசு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் விதித்துள்ள தடை சரியா என்பதை விசாரிக்க நீதிபதி ஜி.பி.மித்தல் தலைமையில் சட்டவிரோத செயல்கள் தடுப்பு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு அதற்கான உத்தரவு இந்திய மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் 5(1) பிரிவின்படி டெல்லி உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதி ஜி.பி.மித்தல் தலைமையில் சட்டவிரோத செயல்கள் தடுப்பு தீர்ப்பாயம் அமைக்கப்படுகிறது. புலிகள் இயக்கத்தை சட்டவிரோத அமைப்பு என்று அறிவிப்பதற்கு மத்திய அரசு தெரிவித்த காரணம் சரியானதுதானா? என்தை அந்த அந்த தீர்ப்பாயம் விசாரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தீவிரவாத இயக்கம் என்று கூறி ஒரு அமைப்புக்கு தடை விதிக்கப்பட்ட பிறகு அது சரியா? என்பதை கண்டறிய இதுபோன்ற தீர்ப்பாயம் அமைக்கப்படுவது வழக்கமான நடவடிக்கைதான். இதன் மூலம், தடையை விலக்க கோரும் வாய்ப்பு சம்மந்தப்பட்ட அமைப்புக்கோ, அதன் ஆதரவாளர்களுக்கோ வழங்கப்படுகிறது. முன்னதாக கடந்த மே 14ஆம் திகதியிட்ட மத்திய அரசின் அரசிதழில் விடுதலைப் புலிகளுக்கு ஐந்தாண்டுகள் தடை விதிக்க மத்திய அரசு சில காரணங்களை கூறியிருந்தது. அதில், விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையை மையமாக கொண்டு செயற்பட்டாலும் அதற்கு இந்தியாவில் அனுதாபிகளும், ஆதரவாளர்களும் உள்ளனர். இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒடுக்கப்பட்ட பிறகும், ஈழம் கோரிக்கையை வலியுறுத்தி அந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் செயல்படுகிறார்கள். அதன் தலைவர்கள் ஈழம் கோரிக்கைக்காக நிதி திரட்டுதல், பிரச்சார நடவடிக்கை மேற்கொள்ளுதல் ஆகிய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். விடுதலை புலிகளுக்கு ஆதரவாக இந்தியாவில் சில குழுக்கள் செயல்பட்டன. இதனால் அவற்றின் உறுப்பினர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின்கீழ், 2012, மே 14ஆம் திகதி முதல் இந்தாண்டு ஏப்ரல் மாதம்வரை வழக்குகழ் வதிவு செய்யப்பட்டன. சிலர் மீது வெடிமருந்து சட்டங்களின்படியும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விடுதலை புலிகளுக்கு சாதகமாகவும், ஈழம் கோரிக்கையை ஆதரித்தும் இணையதளம் மூலம் வெளிநாடுகளின் வாழும் இலங்கை தமிழரக்ள் சிலர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இலங்கையில் விடுதலை புலிகளை வீழ்த்த இந்திய மத்திய அரசே காரணம் என்றும் அவர்கள் கூறிவருகிறார்கள், இதுபோன்ற பிரசாரங்களால் இந்தியாவில் உள்ள மிக முக்கிய பிரமுகர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே பிரிவினையை தூண்டும் இதுபோன்ற குழுக்களை ஊக்குவிக்கும் விடுதலை புலிகள் இயக்கத்தை தொடர்ந்து சட்டவிரோத அமைப்பாக கருத மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்த இயக்த்தினராலும், அதன் ஆதரவாளர்களாலும் இந்தியாவின் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பு நேரும் என்பதால் விடுதலை புலிகள் இயக்கத்தை தீவிவாத அமைப்பு என அறிவித்து அந்த இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மலையகத்தில் பெய்து வரும் கடும் மழையினால் மண்சரிவு

மலையகத்தில் பெய்து வரும் கடும் மழையினால்  ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஹட்டன் – கொழும்பு, கண்டி வீதி போக்குவரத்து மண்சரிவினாலே தடைப்பட்டுள்ளதுடன் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு வாகன சாரதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, ஹட்டன் செனன் தோட்டத்தில் ஏற்பட்ட மண் சரிவுகாரணமாக நான்கு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட வீடுகளில் உள்ளவர்கள் அயலவர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். டிக்கோயா போர்டைஸ் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 88 குடும்பங்களை சேர்ந்த 310 பேர் தற்காலிகமாக புளியாவத்தை தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  மகாவலி ஆற்றின் கிளையாறான கொட்டகலை ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக பத்தனை-திம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ஹரிங்டன் வீடமைப்பு திட்டத்தினுள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால்  30 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மண் சரிவுக்காரணமாக ஒரு வீடும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வீடுகளில் ஐந்தடி உயரத்திற்கு வெள்ள நீர் நிரம்பியுள்ளதாகவும் பாம்பு மற்றும் நீர் வாழ் உயிரினங்கள் வீடுகளுக்குள் புகுந்துவிட்டதாகவும்  வீட்டு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள நோட்டனில் 348 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையில் ஆளணிப் பற்றாக்குறை

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரிலுள்ள ஆளணிப் பற்றாக்குறையினாலேயே இராணுவத்தினரின் உதவியினை தாம் பெற்றுக்கொள்வதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கையில். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், Read more

வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளரின் 100 பஜனைப்பாடசாலை திட்டம்

pajanipajani1வலி மேற்கு பிரதேச சபைத்த் தவிசாளரின் 100 பஜனைப்பாடசாலை திட்டம் கடந்த 06.06.2014 அன்று வலிமேற்கில் வழக்கம்பரை முத்துமாரி அம்பாள் கோவிலில் ஆரம்பித்து வைக்கப்ட்டது. ,ந் நிகழ்வில் பண்ணாகம் மெய்கண்டான் பாடசாலை அதிபர் அவர்களும் கலந்து கொண்டார் ,ந் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் மாணவர்களுக்கான அறநெறி நூல்களை வழங்கி மாணவர்களை ஊக்குவித்தார். Read more

வலி மேற்கு பிரதேச சபையில் சர்வதேச சுற்றாடல் தினம் –

eveners22014 11.06.2014 அன்று மாலை 2.30 மணியளவில் வலி மேற்கு பிரதேச சபையில் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி .ஐங்கரன் தலைமையில் வேள்விசன் நிறுவனத்தின் அனுசரனையுடன் இடம் பெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் திருமதி ச.விஜித்தா அவர்களும் சிறப்பு விருந்தினராக வலிமேற்கு பிரதேச வேள்விசன் முகாமையாளர் ஐ.மைக்கேல் அவாகளும் கௌரவ விருந்தினர்களாக சங்கானை செலான் வங்கி முகாமையாளர் அவர்களும் கலந்து சிறப்பித்துக் கொண்டனர். இவ் சுற்றுப்புற சூழல் தினத்தினை ஒட்டி பாடசாலை மாணவாகளிடையே பல போட்டிகள் விழிப்புனர்வை ஏற்படுத்தும் நோக்கில் மேற் கொள்ளப்பட்டிருந்தது. இவ் நிகழ்வில் நடைபெற்ற போடடிகளில் வெற்றி பெற்ற 200க்கும் அதிகமான மாணவர்கள் பரிசில்களை பெற்றுக் கொணட்னர். நிகழ்வின் ஆரம்பத்தில் வரவேற்புரையினை சபை உறுப்பினர் ஆகிய ந.பி.இராஜ்குமார் நிகழ்த்தினார். தொடர்ந்து ஆசியுரையினை சர்வதேச இந்துகுருமார் ஒன்றிய தலைவரும் சித்தன்கேணி சிவன் ஆலய பிரதம குருவுமாகிய சபா.வாசுதேவக் குருக்கள் நிகழ்த்தினார் தொடர்ந்து தலைமை உரையினை நிகழ்த்தினார் Read more