ரஷ்ய விமான விபத்தில் 61பேர் உயிரிழப்பு-
 
flightரஷ்யாவில் (டுபாய் விமான நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான போயிங் 737 – குடல னுரடியi ) என்ற பயணிகள் விமானம் இன்று காலையில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய அரபு இராஜியத்திலிருந்து ரஷ்யாவின் தென்பகுதிக்கு பயணித்த குடல னுரடியi விமானத்தை தரையிறக்க முற்பட்டவேளையில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.தெளிவற்ற வானிலை காரணமாக ஓடு தளத்தில் விமானம் தரை இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டதாக தெரிவிக்கபடுகின்றது. சேதவிபரங்கள் குறித்த உறுதிப்படுத்தப்பட்ட உடனடித் தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில் விமானத்தில் பயணித்த 55 பயணிகள் 6 ஊழியர்கள் என 61 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவ இடத்தில் 100 இற்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்மொழிகளிலும் கடிதங்கள் அனுப்புவது கட்டாயம்-

rtytytஅரசாங்க அலுவல்களில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட வேண்டியது மீறப்பட முடியாததொன்று என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜித அபேவர்தன தெரிவித்துள்ளார். இதுவரையிலும் இந்த நடைமுறை மீறப்பட்டிருந்தால் எதிர்வரும் 3 மாதங்களில் அதனை சரிப்படுத்திக் கொள்ளுமாறும் அமைச்சர் பணித்துள்ளார். கொழும்பில் உள்ள அபிவிருத்தி நிர்வாக மையத்தில் இடம்பெற்ற மாவட்ட செயலாளர்களுடனான இந்த வருடத்தின் இரண்டாவது சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த கூட்டத்தில் இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களைச் சேர்ந்த செயலாளர்களும் கலந்து கொண்டிருந்தனர். நிர்வாகத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகள், அபிவிருத்திக்குத் தேவையான நிதி, அரசியல் பழிவாங்கல் போன்ற மக்களை பாதிக்கும் விடயங்கள் உள்ளிட்ட பலவற்றை அமைச்சர் இதன்போது கேட்டறிந்துகொண்டதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்திருக்கின்றது.

பசுபிக் விமானப்படை அதிகாரி இலங்கைக்கு விஜயம்-

pacificஅமெரிக்காவின் விமானப்படையின் பசுபிக் விமானப்படையை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். ஹவாயில் உள்ள பேர்ள் துறைமுக பசுபிக் விமானப்படைகளின் உதவித் தளபதியின் அணிதிரட்டல் உதவியாளரான மேஜர் ஜெனரல் ஏபெல் பரியென்ரஸ் எனும் உயர் அதிகாரியே இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.நேற்று விமானப்படை தலைமையகத்தில் விமானப்படை தலைமை அதிகாரி எயாவைஸ் மார்ஷல் குருசிங்கவை சந்தித்து பேச்சுவாரத்தை நடத்தியுள்ளார். இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் தொடர்பிலேயே பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த அதிகாரியே 1991ஆம் ஆண்டு இடம்பெற்ற பாலைவனப்புயல் தாக்குதல் மற்றும் 2001 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈராக் மீதான தாக்குதல் போன்றவற்றிற்கு அமெரிக்க விமானப்படை அணிகளை வழிநடத்தினார் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச நீதிபதிகள் வேண்டாம்-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன-

maithripalaசர்வதேச மனித உரிமை குற்றச்சாட்டு விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை இணைத்துக் கொள்வதற்கு தான் ஒருபோதும் உடன்படமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். நாட்டின் நீதித்துறை மற்றும் நீதிபதிகள் மீது பூரண நம்பிக்கை வைத்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமான நிலை இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற தேசிய சட்டப் பேரவையில் கலந்து கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியுள்ளார். இந்தப் பேரவையில் கலந்து கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்றத்தை பலப்படுத்தி பொறுப்புக் கூறல் செயற்பாட்டை பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக கூறினார். வௌ;வேறு துறைகள் சம்பந்தமாக பாராளுமன்ற குழுக்கள் நியமித்து நாட்டிற்கு பொறுப்புக் கூறும் பொது ஆட்சியை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கம் என்று கூறியுள்ளார். வெளிப்படைத் தன்மையுடைய நிதிக் கொள்கை ஒன்றை ஏற்படுத்துவது அதன் ஒரு நோக்கம் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத மருந்து விற்பனை தொடர்பில் இந்தியப் பிரஜைகள் கைது-

indian mediமட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமான முறையில் ஆயுர்வேத மருந்து விற்பனையில் ஈடுபட்ட இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 12 இந்தியப் பிரஜைகள், காத்தான்குடி கடற்கரையிலுள்ள தனியார் தங்குமிட விடுதியில் வைத்து நேற்று காத்தான்குடிப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகைதந்து சட்டவிரோதமான முறையில் ஆயுர்வேத மருந்து விற்பனையில் இவர்கள் ஈடுபட்டிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். இவர்களில் 40 வயதுக்கு மேற்பட்ட 5 பெண்களும் 7ஆண்களும் அடங்குகின்றனர். கடந்த இரண்டு தினங்களாக இவர்கள் காத்தான்குடியில் தங்கியிருந்தாகவும் காத்தான்குடிப் பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி ஏ.பீ.என்.நிஸாந்த தெரிவித்தார். கைதுசெய்யப்பட்ட இந்தியப் பிரஜைகளிடமிருந்து இலேகியம், எண்ணெய் மற்றும் தூள் உள்ளிட்ட சட்டவிரோத ஆயுர்வேத மருந்துகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்கர் ஆகியோரின் வழிகாட்டலில் காத்தான்குடிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆரிய பந்து வெதகெதரவின் ஆலோசனையில் பேரில் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸ் நிலையக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ் வைத்தியசாலை தாதியர்களின் பணி பகிஷ்கரிப்பு தொடர்கிறது-

nurseயாழ் போதனா வைத்தியசாலையில் தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் அவவர சிகிச்சை பிரிவு தவிர்ந்த எனைய அனைத்துப்பிரிவுகளும் தமது அன்றாட செயற்பாட்டினை இழந்திருந்தன. இதனால் யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்தியரை பார்வையிடுவதற்கு வருகின்ற மக்கள் பெரும் அசௌகரிகமான நிலைக்கு உட்பட்டுள்ளனர். இது தொடர்பில் தாதியார்கள் தெரிவிக்கையில், யாழ். போதனா வைத்தியசாலையின் விடுதியில் பார்வையாளர் ஒருவர் தாக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டில் தாதியர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதற்கு கடும் கண்டனத்தை வெளியிட்டு வந்த தாதியர்கள் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். நேற்றைய ஆர்ப்பாட்டம் இன்றும் தொடர்கின்றது என்றார். இந்நிலையில் வைத்தியசாலை நடவடிக்கைகள் முடக்கப்பட்டு மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.