சித்தன்கேணி பாலர் பாடசாலைக்கு விளையாட்டு பொருட்கள் வழங்கிவைப்பு-

ertrtவலிமேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் புலம்பெயர் தாயக உறவுகளின் உதவியோடு மேற்கொள்ளப்பட்டு வரும் தாயக உறவுகளைத் தலைநிமிரச் செய்வோம் என்ற நிகழ்சித்திட்டத்தின் கீழ்

சித்தன்கேணியில் இயங்கிவரும் பாலர்பாடசாலையின் சிறார்களுக்கு ஜேர்மன் நாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட விளையாட்டுப் பொருட்கள்

குறித்த முன்பள்ளியின் பிரதம ஆசிரியரான செல்வி. லீலாவதி மாரிமுத்து அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

மின்தடை தொடர்பில் ஆராய விஷேட ஜேர்மன் நிபுணர்கள்-

dfdffஇலங்கை மின்சார சபைக்கு சொந்தமான உப மின் விநியோக நிலையத்தில் ஏற்பட்ட சேதம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள

ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த விஷேட நிபுணர்கள் இருவர் நாளை இலங்கை வரவுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பியகம பகுதியிலுள்ள உப மின் நிலைய மின்மாற்றிகளில் சேதம் ஏற்பட்டதோடு வெள்ளிக்கிழமை ஜா-எல கடுகொட பிரதேசத்திலுள்ள மின்மாற்றிகளில் சேதம் ஏற்பட்டிருந்தது.

க.பொ.த சாதாரணதர பரீட்சையில் சிறந்த பெறுபேறுபெற்ற மாணவிக்கு பாராட்டு-

wererஎமது கல்வித்திட்டத்தில் 2013 ஆண்டு ஒக்டோபர் மாதம் உள்வாங்கபட்ட கிளிநொச்சி சென்ற் திரேசா மகளிர் கல்லூரி மாணவி அ.குணலீசா நடந்து முடிந்த க.பொ.த பரீட்சையில் 8 A, B எடுத்து சித்தியெய்தியுள்ளார்.

இவரின் தந்தை கடந்த யுத்தத்தின் போது இறந்து விட்டார். இவரின் குடும்ப சூழ்நிலையிலும் தனது கல்வியில் ஆர்வம் கொண்டு பாடசாலையில் சிறந்த பெறுபேற்றை பெற்று சித்தியெய்திய இவருக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவிப்பதுடன் 

இத்தருணத்தில் தொடர்ந்தும் இவருக்கான கல்வி நடவடிக்கைகளை பொறுப்பேற்று மாதந்தோறும் எம் ஊடாக பண உதவிசெய்து வரும் ஜேர்மனி நாட்டை சேர்நத JOYCESHOP இனருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.  (வட்டு இந்து வாலிபர் சங்கம்)

wererdsfdfd