பெல்ஜியத் தலைநகரில் தொடர் குண்டுவெடிப்புகள், 34 பேர் உயிரிழப்பு-

sfdfddfdddபெல்ஜியம், பிரஸ்ஸல்ஸில் உள்ள சவென்டம் விமான நிலையத்துக்கு வெளியே இடம்பெற்ற இரண்டு வெடிப்பு சம்பவங்களில் 34 பேர் பலியாகியுள்ளதாகவும் 170 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் வெளிநாட்டு செய்தி தெரிவிக்கின்றது. வெடிப்பு சம்பவமொன்றையடுத்து விமானநிலையத்தின் நுழைவாயிலிலிருந்து கரும்புகை மேலெழும்பியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, விமான நிலையத்தின் அனைத்து சேவைகளும் மறுஅறிவித்தல் வரும்வரையிலும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. முன்னதாக விமான நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் தற்கொலைப்படை தாக்குதல் என்று அந்த நாட்டு அரசு உறுதிப்படுத்தியது. இந்நிலையில் குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பிரஸல்ஸில் குண்டு வெடிப்பு இடம்பெற்ற இடத்தில் இலங்கையர்கள் எவரும் இல்லை என்றும், தாக்குதல் சம்பவங்களில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லை எனவும் பெல்ஜியத்திற்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். அந்த நாட்டில் இருக்கும் இலங்கையர்கள் குறித்த தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு 003223445585 அல்லது 0032471872745 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ள முடியும் என்றும் இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். மேற்படி தாக்குதலை அடுத்து ஜாவுன்டெம் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் தாக்குதலை நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் நபரில் உடலுக்கு அருகில் கலாஷ்னிகோவ் துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதல்கள் கண்மூடித்தனமாக கோழைகளால் நடத்தப்பட்டவை என பெல்ஜிய அதிபர் ஷார்ல் மிஷேல் கூறியுள்ளார். இந்த நாள் ஒரு கருப்பு தினம் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் நகரின் முக்கியமான இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், அணுமின் நிலையங்களில் மேம்பட்ட பாதுகாப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உலகளவில் எழுந்துள்ள அச்சுறுத்தலில் வெளிப்பாடே பிரஸல்ஸ் நகரில் இடம்பெற்றத் தாக்குதல்கள் என பிரெஞ்ச் அதிபர் ஒலாந் கூறியுள்ளார். இப்படியான அச்சுறுத்தல்களுக்கு சர்வதேச அளவில் பதிலடி கொடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். பயங்கரவாதத்துக்கு எதிரான நீண்டபோரை உலகம் எதிர்கொண்டு வருகிறது எனவும் பிரெஞ்ச் அதிபர் எச்சரித்துள்ளார். பிரஸல்ஸ் நகரில் இடம்பெற்றத் தொடர் குண்டுத் தாக்குதல்களை அடுத்து பெல்ஜியத்துக்கும் பிரான்ஸ_க்கும் இடையேயான எல்லை மூடப்பட்டுள்ளது. 

kkklkk njjjj