Header image alt text

uduvil clup36உடுவில் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தில் பதிவுசெய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழா நிகழ்வு (22.05.2017)  திங்கட்கிழமை பிற்பகல் 3.00மணியளவில் யாழ். ஸ்கந்தவரோதயா கல்லூரி மைதானத்தில் திரு. ரி.சிந்துஜன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வட மாகாணசபை உறுப்பினர் திரு. பா.கஜதீபன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக திரு. எம்.செல்வஸ்தான் (அதிபர், ஸ்கந்தவரோதயாக் கல்லூரி), திரு. எஸ். சண்முகவடிவேல் (மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி) ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

Read more

v.koddai hidu01இன்று எமது புலம்பெயர் உறவான ஜேர்மன் நாட்டை சேர்ந்த மு.பரமேஸ்வரி அவர்களால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக புன்னை நீராவியடியை சேர்ந்த சந்திரன் அஜித்குமார் என்பவரின் பிள்ளைகளின் கற்றல் செயற்ப்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக புதிய துவிசக்கரவண்டி ஒன்றை அன்பளிப்பு செய்து வைத்துள்ளார். Read more

londonபிரிட்டனின் மான்செஸ்டர் அரீனா பகுதியில் பயங்கரவாத தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் சம்பவம் ஒன்றில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் 59 பேர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்க பாப் பாடகரான அரியானா கிராண்டின் இசை நிகழ்ச்சி நடந்த திடலில், இசை கச்சேரி முடிந்த பிறகு திங்கள்கிழமை பிரிட்டன் நேரம் 22.35க்கு இந்த வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால், பயங்கரமான பயங்கரவாத தாக்குதல் நடந்ததாக போலீசார் கருதும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனது மனம் வருந்துவதாக பிரிட்டன் பிரதமர் தெரீசா மே தெரிவித்தார்.

ஒரு தற்கொலை குண்டுதாரியால் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக பெயர் வெளியிடாத இரண்டு அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவித்துள்ளன.

Omanthai 01தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகரன் கேசவன் அவர்களின் ஏற்பாட்டில் ஓமந்தை இளைஞர் கழகத்தின் முழுப்பங்களிப்புடன்   ஓமந்தை ஆரம்ப மருத்துவப்பிரிவு  வைத்தியசாலையில்   இளைஞர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
ஓமந்தை ஆரம்ப மருத்துவப்பிரிவு வைத்தியசாலையில் சிரமதானப்பணிகளுடன்  சுற்று மதிலுக்கு வர்ணம் பூசப்பட்டு மர நடுகை வைபவமும் வெகு சிறப்பாக  நடைபெற்றது.

Read more

v.koddai04v.koddai02வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முல்லைத்திவைச் சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு கிணறு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மூங்கிலாறு தெற்கு உடையார்கட்டை சேர்ந்த் கதிர்செல்வன் கருணநிதி என்ற பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு இக் கிணறு புலம் பெயர் நாட்டில் உள்ள கருணை உள்ளம் கொண்ட அன்பர்களின் நிதி அனுசரைனையுடன் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் அன்பளிப்பாக கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. Read more

kandarodai02யாழ். சுன்னாகம், கந்தரோடையில் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று 21.05.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30மணியளவில் நடைபெற்றது. 
பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. 
அத்துடன் இன்று இருக்கக்கூடிய அரசியல் அமைப்பு மாற்றம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை பலப்படுத்த வேண்டியதன் அவசியம் என்பன குறித்து பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்கள் விளக்கிக் கூறியதோடு, இவை தொடர்பிலான கருத்துப் பரிமாறல்களும் இடம்பெற்றன. 
elalai13யாழ். ஏழாலை கண்ணகை முன்பள்ளி சமூகத்தினர் நடாத்திய வருடாந்த விளையாட்டு விழா-2017 இன்று சனிக்கிழமை பிற்பகல் ஏழாலை கண்ணகை அம்பாள் தேவஸ்தான வளாகத்தில் திரு.த.திருஞானசம்பந்தர் (சமாதான நீதவான், தலைவர் அருள்மிகு கண்ணகை அம்பாள் தேவஸ்தானம்) அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. 
நிகழ்வின் முதன்மை விருந்தினர்களாக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், திரு. உதயமோகன் (அதிபர், ஏழாலை மகாவித்தியாலயம்) ஆகியோரும், 

Read more

uma schoolவவுனியா திருநாவற்குளம் உமாமகேசுவரன் முன்பள்ளியின் புதுவருட பாரம்பரிய நிகழ்வுகள் முன்பள்ளியின் அதிபர் திருமதி மீரா குணசீலன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகரபிதா திரு.க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
சிறப்பு அதிதியாக வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், தமிழ் தேசிய இளைஞர் கழக அமைப்பாளர் திரு.வ.பிரதீபன் மற்றும் உறுப்பினர் ரவி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Read more

kilinochciமுகமாலையில் பொலிஸார் மீது இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் முகமாலை  பிரதேசம் மீண்டும் போர்க்களம் போன்று காட்சியளிக்கிறது. இன்று அதிகாலை முதல் ஆயுதம் தாங்கிய  பெருமளவு இராணுவத்தினர் மற்றும்  பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். Read more