இந்தியாவில் இருந்து இலங்கையர்கள் சட்டவிரோதமான படகு பயணத்தின் மூலம் அவுஸ்திரேலியாவை சென்றடைவதை தடுப்பதற்கு அவுஸ்திரேலியா விசேட கலந்துரையாடலை நடத்தியுள்ளது.

இதற்காக அவுஸ்திரேலியாவின் வான்படை தளபதி ரிட்சர் ஓவென் தலைமையிலான பிரதிநிதிகள் குழு ஒன்று இந்தியாவின் தமிழக மற்றும் புதுச்சேரி கடற்படை பிரதானி அலோக் பட்நகரை சந்தித்துள்ளது. தமிழகத்தில் ஏதிலி முகாம்களில் வசிக்கின்றவர்களும், இலங்கையில் இருந்து புதிதாக செல்லும் சிலரும் அங்கிருந்து கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியா செல்லும் நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர்களுக்கு இடையில் கலந்துரையாடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் எதிர்வரும் மார்ச் 28ம் திகதிமுதல் ஏப்ரல் 1ம் திகதிவரையில் விசாகப்பட்டிணத்தில் நடைபெறவுள்ள ஆசி இண்டெக்ஸ் கூட்டுப் பயிற்சிகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.