எம்.ஜி. ராமச்சந்திரன் (M.G.R) அவர்களின் பிறந்தநாளை (17.01.2020) முன்னிட்டு யாழ். கல்வியங்காட்டில் அமைந்துள்ள அன்னாரது உருவச்சிலை முன்பாக இன்று இடம்பெற்ற நிகழ்வில்
ஈழத்து MGR என அறியப்படும் இருபாலை திரு. சுந்தரலிங்கம் அவர்களின் தலைமையில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். Read more
யாழ் நகரில் நேற்று (16.01.2020) ‘கோபவனி’ நிகழ்வு இடம்பெற்றிருந்தது. விவசாயிக்கு பல வழிகளிலும் துணையாக விளங்கும் பசுக்களுக்கும் எருதுகளுக்கும் மரியாதையும் நன்றியும் செலுத்துமுகமாக இந்த கோபவனி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
யாழ். சங்கானை சிவப்பிரகாச ஆரம்ப பாடசாலை கால்கோள் விழா நேற்று (16.01.2020) இடம்பெற்றது.
தலைநகர் கொழும்பிலிருந்து நாட்டின் ஏனைய இடங்களுக்கான உள்நாட்டு பயணிகள் விமான சேவை மீது விதிக்கப்பட்டிருந்த நீக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல தொகுதியின் அமைப்பாளர் பதவியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க நீக்கப்பட்டுள்ளார்.
புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
யாழில் உள்ள சமுர்த்தி வங்கி முகாமையாளரின் காருக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. யாழ். கல்வியங்காட்டு பகுதியிலுள்ள மேற்படி வங்கி முகாமையாளரின் வீட்டுக்குள் நேற்று இரவு நுழைந்த இனந்தெரியாத நபர்கள் வளவினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
ட்ரோன் இயந்திரத்தை பறக்கவிட விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
திருட்டு சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய இலங்கையர்கள் ஐவர் அவுஸ்திரேலியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக விக்டோரியா பொலிஸார் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்தி ஊடகச் செய்தி கூறுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்னவிற்கு பிணை வழங்குவதற்கான உத்தரவிற்கு எதிராக சட்டமா அதிபர் முன்வைத்த மீள்திருத்த மனு தொடர்பில் பிரதிவாதிகள் தரப்பிற்கு அறிவித்தல் விடுப்பதற்கான உத்தரவு எதிர்வரும் 21 ஆம் திகதி பெற்றுக்கொடுக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.