Header image alt text

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட சிங்கள மாணவியைக் கழுத்தறுத்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட அவரது கணவரை, பெப்ரவரி 6ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.பீற்றர் போல், இன்று உத்தரவிட்டார்.

குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கொல்லப்பட்ட மாணவியின் தாயாரும் சகோதரியும் மன்றில் முன்னிலையாகி இறப்பு விசாரணையில் சாட்சியமளித்தனர். Read more

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீனின் சகோதரன் ரிப்கான் பதியூதீன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பெப்ரவரி 6ம் திகதி வரையில் அவரை விளக்கமறியிலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரட்ன உத்தரவிட்டுள்ளார்.

தலைமன்னார் பிரதேசத்தில் அமைந்துள்ள பிற நபருக்கு சொந்தமான சுமார் 40 ஏக்கர் நிலப்பரப்பினை போலியான ஆவணங்களை தயாரித்து கைப்பற்றிய சம்பவம் தொடர்பில் ரிப்கான் பதியூதின் இரகசிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இவ்உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாதுகாக்கப்பட்ட வில்பத்து வனத்தை அழித்து சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முதலில் நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மஹிந்த சமயவர்தன முன்னிலையில் இன்று குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் 27ம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் நீதி மையத்தால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. Read more

சுமார் 6 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியாகியுள்ளார்.

அவர் இன்று காலை 9.30 குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக ஆஜராகி இருந்தார். சமீபத்தில் சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட அழைப்பின் படி வாக்குமூலம் ஒன்றை வழங்க அவர் இவ்வாறு முன்னிலையாகியிருந்தார்.

இலங்கைக்கு வரும் மற்றும் இலங்கையிலிருந்து வெளியேறும் இலங்கையர்களுக்காக விமான நிலையத்தினுள் தனியான இரண்டு விஸா கருமபீடங்களை திறக்க வானுர்தி தள மற்றும் விமான சேவைகள் நிறுவகம் தீர்மானித்துள்ளது.

அந்த நிறுவகத்தின் உப தவிசாளர் ரஜீவ சூரியஆராச்சி இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் வானுர்தி தளத்திற்கு விஜயம் செய்தபோது வழங்கிய ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட சமன் ரத்னபிரியவின் பெயர், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று அறிவிக்கப்படவுள்ளது.

கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்தப் பதவிக்கு சமன் ரத்னபிரிய பெயரிடப்பட்டுள்ளார். இந்த விடயத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் உறுதிப்படுத்தியுள்ளார். Read more

தபால்மூல வாக்களிப்பு தொடர்பில் தற்போது காணப்படும் சட்டத்தை திருத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அத்தியாவசிய சேவைகளில் பணிபுரிவோருக்கும் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்குதவற்காக இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என ஆணைக்குழுவின் சட்டத்துறைப் பணிப்பாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். Read more

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், தனது முகநூலில் படங்களைப் பதிவிட்டதன் மூலம் இஸ்லாம் மார்க்கத்தை அவமதித்த குற்றத்துக்காக, டுபாய் நீதிமன்றத்தால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட இளைஞர்கள் மூவரும் விடுதலை செய்யப்பட்ட நிலையில், இலங்கை திரும்பியுள்ளனர்.

சிலாபம் – தொடுவாவ பகுதியைச் சேர்ந்த டயிள்யூ.ரமேஸ் பெர்ணான்டோ, காலி பகுதியைச் சேர்ந்த எம்.ஏ.விஸ்வ டீ சில்வா, மட்டக்களப்பைச் சேர்ந்த குணதாஸ டிரோன் ஆகிய மூவரே, இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். Read more

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) விளக்கமறியல் காலம் எதிர்வரும் பெப்ரவரி 25ம் திகதி வரை மீள நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான வழக்கின் விசாரணைகள் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். Read more

மட்டக்களப்பு- கிரான் -கோராவெளி பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் 67 வயதுடைய விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து உழவு இயந்திரம் மற்றும் சாரதி தலைமறைவாகியிருந்த வேளை அப்பிரதேச மக்கள் ஒன்று திரண்டு குற்றவாளியைக் கைது செய்யும் வரை சடலத்தை அகற்றவிடாது ஆர்ப்பரித்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. Read more