யாழ். வறணி பகுதியில் உள்ள குளத்தில் குளித்துக் கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று பிற்பகல் 1.20 மணியளவில் குறித்த நபர் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
அங்கிருந்தவர்கள் இதனை அவதானித்து உடனடியாக மேலும் சில பொதுமக்களை அழைத்து வந்ததுடன் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து நடத்தப்பட்ட தேடுதலில் குறித்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பில் திறக்கப்பட்டுள்ள காணாமல்போனவர்கள் தொடர்பான அலுவலகத்தினை மூடுமாறு கோரியும் காணாமல்போனவர்கள் தொடர்பில் சர்வதேச நீதி விசாரணையை வலியுறுத்தியும் நேற்று மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு பேரணியும் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.